fbpx

”யாரிடமும் கடனாக மட்டும் இந்த பொருளை கொடுக்காதீங்க”..!! ”மீறினால் அவ்வளவு தான்”..!!

செல்வங்களை வாரி வழங்கும் மகாலட்சுமி, நம் வீட்டில் குடி கொண்டால் கஷ்டங்கள் தீரும். மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களாக குறிப்பிடப்படுபவற்றில் உப்பும் முக்கிய இடம் வைக்கிறது. உப்புக்கு கெட்ட சக்திகளை விரட்டி வீட்டில் நேர்மறை சக்தியை ஈர்த்துக் கொள்ளும் வல்லமை அதிகம் உண்டு. உப்பை கீழே சிந்தி விடக்கூடாது காலில் உப்பை தீண்டக் கூடாது. உப்பை கடனாகவே கொடுக்க கூடாது என கூறுகிறார்கள் முதியோர்கள். உப்பை யாரிடமும் இரவல் வாங்கவே கூடாது. இந்துக்களின் சம்பிரதாயபடி, உப்பு மங்கலகரமான பொருள். இதனை எல்லா சுப காரியங்களிலும் பயன்படுத்துவார்கள். கெட்ட திருஷ்டி மறைய உப்பை கொண்டு தான் சுற்றி போடுவார்கள். மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் உப்பை, வீட்டு கிரகப்பிரவேசத்தின் போது வாங்கி கொடுப்பதை பார்த்திருப்பீர்கள். புதிய வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்யவே அப்படி வாங்கி கொடுக்கப்படுகிறது. 

மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் உப்பினை நாம் கடனாக கொடுக்கும்போது நம் வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சம் சுத்தமாக விடும் என்பது ஐதீகம். அதனால் தான் உப்பினை கடனாக கொடுக்கக் கூடாது என்பார்கள். வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து பூஜைகள் செய்த பின், கடையில் கல் உப்பு வாங்கி கொள்ளுங்கள். இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு விடுங்கள். இப்படி ஒவ்வொரு வாரமும் செய்து வந்தால் வருமானம் கூடும். கடன் பிரச்சனைகள் முற்றிலும் தீரும். உங்களுடைய வீட்டில் கண் திருஷ்டி, கெட்ட சக்தி ஆதிக்கம் இருக்கிறது என்றால் ஒரு பாத்திரத்தில் உப்பு போட்டு கலந்த நீரை 3 நாட்கள் வீட்டில் வைத்து, அதனை கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள். இதனால் எதிர்மறை ஆற்றல் குறையும்.

Chella

Next Post

"என் வீட்டுக்கு வந்தா செர்டிஃபிக்கெட்....."!ஸ்குவாஷ் வீராங்கனையிடம் பாலியல் சீண்டலில் சிக்கிய ட்ரைனர்!

Mon Mar 6 , 2023
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சான்றிதழ் வாங்க வந்த விளையாட்டு வீராங்கனையை தனியாக வீட்டிற்கு வரச் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்திருக்கிறது. இந்த விளையாட்டு அரங்கத்தில் ஹாக்கி, கால்பந்து, வாலிபால், நீச்சல் மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுக்கான மைதானங்கள் உள்ளன. இங்கே ஏராளமான விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர்களின் […]

You May Like