சாணக்கிய நீதியில் சாணக்கியர் வாழ்க்கைத் தொடர்பான பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
நேரம்..!!
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் இளமை பருவத்தில் நேரத்தை மதிக்கவில்லை என்றால், அவர் பிற்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமாம். மேலும், வாழ்க்கையில் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். நிதி நெருக்கடியையும் அவர்கள் வாழ்வில் ஏற்படுமாம். எனவே, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.
தேவையற்ற செயல்கள்..!!
இளம் வயதிலேயே தேவையற்ற செயல்களிலும், வேலைகளிலும் ஈடுபடக் கூடாது. சாணக்கியரின் கூற்றுப்படி, தங்கள் நேரத்தை சரியாகப் பயன்படுத்த முடியாதவர்களுக்கு முதுமை எப்போதும் நெருக்கடியான காலமாக இருக்கும். மேலும் அது வாழ்க்கையில் பல சிக்கலையும் ஏற்படுத்தும்.
கெட்ட நண்பர்கள்..!!
இளமையில் கெட்ட சகவாசத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். அவர்களின் கெட்ட சகவாசத்தின் விளைவு, வாழ்நாள் முழுவதும் அவர்களைத் தொடரும். பெரும்பாலும் இது உங்களை நினைத்து நினைத்து வருந்த வைக்கும். எனவே, நண்பர்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பணம்..!!
ஒரு நபர் பணத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்கள் வயதான காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். மேலும், பணத்தை சரியான முறையில் பயன்படுத்தத் தெரியாதவர்கள் பிற்காலத்தில் நிதி ரீதியாக கஷ்டப்படுவார்களாம். பணத்தை செலவு செய்வதில் கட்டுப்பாடு வேண்டும்.
எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும்..!!
தனது இளமைக்காலத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவில்லை என்றால், அவர்கள் முதுமையில் மிகவும் வருந்த வேண்டியிருக்கும். பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கையின் முதுமைக்காலம் மிகவும் சவாலானதாக இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் வெற்றிக்கான திறவுகோலை இழக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, ஒருவர் மிகுந்த கவனத்துடன் இளமைக்காலத்தை கழிக்க வேண்டும்.
Read More : சிறுநீரகத்தில் கல் இருக்கா..? உடனே கரைக்கும் பாட்டி வைத்தியம்..!! நோட் பண்ணி வெச்சிக்கோங்க..!!