fbpx

உப்பை அடுப்பு பக்கத்தில் வச்சுருக்கீங்களா?? உடனே மாத்தி விடுங்கள்….

பொதுவாக நமது முன்னோர்கள் பின் பற்றிய ஒவ்வொன்றும் அறிவியல் சார்ந்ததாக இருக்கும். அறிவியல் வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் கூட ஒவ்வொன்றையும் அத்தனை தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் நாகரீகம் என்ற பெயரில் நமது முன்னோர்கள் சொன்ன அறிவியல் சார்ந்த விஷயங்களை நாம் மறந்து விடுகிறோம். அந்த வகையில், முன்னோர்கள் சொன்ன ஒரு விஷயம் தான் உப்பை அடுப்பு பக்கத்தில் வைக்க கூடாது என்பது. அப்படி ஏன் அவர்கள் கூறினார்கள் தெரியுமா?? வாருங்கள் பார்ப்போம்.

நம்மை பொறுத்தவரை, உப்பு வெறும் சுவைக்காக சேர்க்கப்படும் ஒன்று. ஆனால் உப்பில் நமது உடலுக்கு தேவையான அயோடின் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அயோடின் நமது உடலுக்கு தேவையான முக்கியமான சத்துக்களில் ஒன்று. அயோடின் சரியான அளவு இல்லாத பட்சத்தில் தான் தைராய்டு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் ‘தைராக்ஸின்’ ஹார்மோன் உதவுகிறது. அந்த தைராக்ஸின் ஹார்மோன் செயல்பட உதவுவது அயோடின். இத்தனை முக்கியமான அயோடின் உப்பில் உள்ளது.

உப்பை பீங்கான் பாத்திரத்தில் ஒளி உட்செல்லாத வகையில் வைக்க வேண்டும். ஏனென்றால், உப்பில் காணப்படும் அயோடின் உலோக பாத்திரங்களுடன் தாக்கம் புரியக்கூடியது எனவே இதனை வேறு உலோகத்துடன் தாக்கம் புரியாத வகையில் வைக்க வேண்டும். உப்பை வைக்கும் பாத்திரம் ஒளி உட்புகாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்கு காரணம் சூரிய வெப்பத்தில் அயோடின் அழிவடையக்கூடியது என்பதனால் தான். உப்பு பாத்திரத்தை அடுப்பின் அருகில் வைக்க கூடாது என கூறுவதற்கு காரணமும், அயோடின் வெப்பத்தில் அழிவடையக்கூடியது என்பதால் தான். அப்படி, உப்பில் உள்ள அயோடின் அழிவடைந்த பின்னர் உணவில் சேர்ப்பது பிரையோசணம் அற்றது.

Maha

Next Post

டூத் பிரஷை பாத்ரூம்ல வச்சா என்ன ஆகும் தெரியுமா?? இனி இந்த தப்ப பண்ணாதீங்க..

Sat Sep 30 , 2023
முன்பு எல்லாம், குளிப்பதற்கும், மலம் கழிப்பதற்கு என்று தனி அறைகள் இருந்தது. மேலும், பல் துலக்க தனியாக வீட்டின் முன் அல்லது பின் ஒரு இடத்தை வைத்திருப்போம். ஆனால் தற்போது, ஒரு சின்ன அறைக்குள் தான் மலம் கழிப்பது, குளிப்பது, பல் துலக்குவது போன்ற எல்லாவற்றையும் செய்து வருகிறோம். அதிலும் பலர் டூத் பிரஷ்கள் பாத்ரூமில் வைத்திருப்போம். இவ்வாறு நாம் செய்வது மிகவும் சுகாதாரமற்ற ஒரு செயல். ஏன் தெரியுமா?? […]

You May Like