fbpx

ஆங்கிலம் தெரியவில்லையா?… கணினி, செல்போனில் இனிமேல் Translate ரொம்ப ஈஸி!… வழிமுறைகள் இதோ!

கணினியில் ஃபயர்பாக்ஸ் பிரவுசரை பயன்படுத்தி எளிய முறையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு Translate செய்யும் முறை குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்வோம்.

கணினியில் ஃபயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தினால், மொழிபெயர்ப்பு எக்ஸ்டென்ஷனை பதிவிறக்கம் செய்து, விரும்பும் இணையப் பக்கத்தை முழுமையாக தமிழில் வாசிக்க முடியும். அந்தவகையில், முதலில் ஃபயர்பாக்ஸ் அப்ளிகேஷனை கணினியில் திறந்ததும், அதன் வலது மூளையில் மூன்று கோடுகள் அடுக்கப்பட்டிருக்கும். அது அப்ளிகேஷன் மெனு. அதனை க்ளிக் செய்தால், பட்டியல் ஒன்று விழும்.அதில் கீழே செட்டிங்ஸ் என இருக்கும்.அதனையும் க்ளிக் செய்து உள்நுழைந்தால், எக்ஸ்டென்ஷன் & தீம்ஸ் (Extension & themes) என சிறிய எழுத்தில் தென்படும். அதனை தொட்டால், புதிய பக்கம் தோன்றும். அதில் தலைப்பில் ‘Find More Add-ons’ என ஒரு தேடுதல் பட்டை இருக்கும்.

அதில் டிரான்ஸ்லேட் (Translate) என ஆங்கிலத்தில் தேடினால், அடுத்தப் பக்கத்தில் தேடல் முடிவுகள் தோன்றும். முதல் முடிவாக கூகுள் டிரான்ஸ்லேட் என்பது பரிந்துரைக்கப்பட்டிருக்கும். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தும் ஆட் ஆன் இது. அதனை க்ளிக் செய்தால் புதிய பக்கம் தோன்றி, அதில் ‘ஆட் டூ ஃபையர்பாக்ஸ்’ (Add to firefox) என நீல நிறத்தில் காட்டப்படும். அதற்கு ஒகே தெரிவித்து, கேட்கும் அனுமதிகளுக்கு சம்மதம் தெரிவித்தால், அடுத்தப் பக்கத்தில், எழுத்துக்களை (Text) எந்த மொழிக்கு மொழிப்பெயர்க்க வேண்டும், பக்கத்தை (Page) எந்த மொழிக்கு மொழி பெயர்க்க வேண்டும் என கேட்கும். அதில் ஆங்கிலம் என இருக்கும். அதை கிளிக் செய்து தமிழ் என டைப் செய்து அதனை தேர்வு செய்ய வேண்டும். கீழே பச்சை நிறத்தில் மாற்றங்களை சேமிக்கச் சொல்லியிருப்பார்கள். அதனை சேமித்தால், ஆட் ஆன் ஆனது செயல்பாட்டுக்கு வந்து விடும்.

இதையடுத்து, நீங்கள் படிக்க விரும்பும் ஆங்கிலப் பக்கத்திற்கு சென்று, கட்டுரையை திறங்கள். கட்டுரை ஆங்கிலத்தில் வந்ததும், கண்ட்ரோல் உடன் ஷிப்ட் மற்றும் 3 (Ctrl + Shift + 3) சேர்த்து அழுத்தினால், பக்கம் மொத்தமும் உடனடியாக தமிழுக்கு மாறிவிடும். இந்த ஆட் ஆனின் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் மொழிபெயர்த்துள்ள ஒரு வாக்கியத்தின் மீது மவுசை வைத்தால், அதன் மூலமான ஆங்கில வாக்கியத்தையும் காட்டும். எளிதில் நாம் பொருள் உணர்ந்துகொள்ளலாம். சரியாக தான் மொழிபெயர்த்திருக்கிறதா என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

பெரும்பாலான ஆன்ட்ராய்ட் மொபைல்களில் க்ரோம் பிரவுசர் தான் தரப்பட்டிருக்கும். அதில் ஆங்கில இணையப் பக்கங்களை தமிழில் படிப்பது மிகவும் சுலபம். க்ரோமில் தேவையான ஆங்கில இணையப் பக்கத்திற்கு செல்லுங்கள்.பின்னர் வலது மேல் மூளையில் உள்ள மூன்றடுக்கு புள்ளியை தட்டினால் பட்டியல் ஒன்று விழும். அப்பட்டியலில் டிரான்ஸ்லேட் என தரப்பட்டிருப்பதை அழுத்தி, அதில் தமிழை தேர்வு செய்தால், இணையப் பக்கம் தமிழில் தோன்றும்

Kokila

Next Post

ATM-ல் கிழிந்த 100, 200 போன்ற நோட்டுக்கள் வந்தால் உடனே மாற்றுவது எப்படி தெரியுமா...? முழு விவரம் உள்ளே...

Tue Feb 21 , 2023
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும், கிழிந்த, பழைய மற்றும் பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாகப் புதிய நோட்டுக்களை வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறை உண்டு. ஆனால் இது நம்மில் பலருக்கு தெரியாது. கிழிந்த அல்லது மோசமாக வைக்கப்பட்ட நோட்டுகள் ஏடிஎமில் இருந்து பண பரிவர்த்தனையின் போது உங்களுக்குப் பல முறை வந்து விடும். கிழிந்த நோட்டைக் கண்டால் என்ன […]

You May Like