புதிய டேபிட் அல்லது கிரெடிட் கார்டிற்கு அப்ளை செய்யும் போது, கார்டு வழங்கப்படும் சமயத்தில் நீங்கள் கார்டு ட்ரான்ஸாக்ஷன் கண்ட்ரோல் லிமிட்டை அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது இந்த டெபிட் அல்லது கிரெடிட் கார்டை நெட் பேங்கிங், மொபைல் ஆப் அல்லது வங்கிக் கிளையில் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் ட்ரான்ஸாக்ஷன்கள் செய்ய பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் முதலில் கார்டு கண்ட்ரோல் ஆப்ஷனை எனேபிள் செய்ய வேண்டும்.
கார்டில் செய்யப்படும் ட்ரான்ஸாக்ஷன்கள் குறித்த பாதுகாப்பு கருதி இந்த மாற்றம் தற்போது புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக யூசர்களுக்கு கார்டுகளை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடு வழங்கப்படுகிறது. இன்டர்நேஷனல் ட்ரான்ஸாக்ஷன்கள், ஆன்லைன் பர்சேஸ்கள் மற்றும் காண்டாக்ட்லெஸ் பேமெண்ட் போன்ற பேமெண்ட் மோடுகளை பயன்படுத்தும் பொழுது பல்வேறு வகையான செலவு செய்வதற்கான லிமிட்டை அமைக்க வேண்டும். மேலும் இந்த கார்டை உள்ளூர் அல்லது வெளிநாடுகளில் ட்ரான்ஸாக்ஷன்கள் செய்வதற்கு பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதையும் யூசர்கள் முடிவு செய்ய வேண்டும்.
டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு வழங்கப்படும் பொழுது டீஃபால்டாகவே அந்த கார்டின் கண்ட்ரோல் செயல்முறை ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருக்கும். அதாவது கார்டின் இந்த ட்ரான்ஷாக்ஷன் கண்ட்ரோலை ஸ்விட்ச் ஆன் செய்யாமல் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் எங்கேயும் பயன்படுத்த முடியாது. இதனை நீங்கள் வங்கியின் நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் பயன்படுத்தி செய்யலாம். வங்கியின் போர்ட்டலுக்குள் நுழைந்து அல்லது மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து உங்களது அக்கவுண்டில் லாகின் செய்வதன் மூலமாக நீங்கள் ட்ரான்ஸ்ஷாக்ஷன் லிமிட்டை அமைத்துக் கொள்ளலாம்.
எனினும் இந்த கார்டு கண்ட்ரோல் மெக்கானிசத்தை ஒரு நபர் எனேபிள் செய்ய மறந்துவிட்டதன் காரணமாக நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங்கில் கார்டை பயன்படுத்த முடியாமல் போகும் பொழுது, இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள வங்கிக் கிளையே அணுகுவதன் மூலமாக ட்ரான்ஸாக்ஷன் லிமிட்டை எனேபிள் அல்லது டிசேபிள் செய்து கொள்ளலாம்.