இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஆனாலும் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் பொதுமக்களை பெரிதாக பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனாலும் வருடம் தோறும் தொடங்கும் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் தற்போது வரையில் வெயிலின் தாக்கம் கூடுதலாக இருப்பதால் மக்கள் பல்வேறு அசவுகரிகளை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை உச்சத்தில் இருக்கிறது என்பதால் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையில் வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது இன்று சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் போன்ற பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸில் இருந்து 42 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்பதால், குழந்தைகள் கர்ப்பிணிகள் முதியவர்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் வரும் ஞாயிறு வரையில் வெயில் அதிகமாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக, அசவுகரியம் ஏற்படலாம் என்றும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் போன்றோர் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.