ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, மற்றொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையே, ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும். இதற்கான காலக்கெடு பலமுறை அரசு வழங்கியிருந்த நிலையில், பொதுமக்களும், ரேஷன் கார்டு ஆதார் கார்டினை இணைத்திருந்தனர்.
இந்நிலையில், ஆதார் எண்களைக் கொண்ட அனைத்து நபர்களும், பதிவு செய்த நாளிலிருந்து 10 வருடங்களுக்கு ஒரு முறை ஆதாரில் உள்ள ஆவணங்களை புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனால்தான், ஆதார் கார்டினை புதுப்பிக்க ஜூன் 11ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலும் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் ஒருமுறை அவகாசமும் தரப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் கார்டு விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வற்கான கால அவகாசம் டிசம்பர் 14ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
myAadhaar மட்டுமே இலவச சேவையை வழங்குகிறது. இருந்தாலும், நீங்கள் ஆதார் மையங்களுக்குச் செல்ல விரும்பினால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். முகவரி புதுப்பிக்க கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றினாலே போதும்:
* https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுக வேண்டும்.
* மை ஆதார் என்ற பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்.
* பிறகு, “உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும்” என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
* இப்போது, ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு ஓடிபி வரும்.
* அந்த ஓடிபியை பதிவு செய்தவுடன் “புதுப்பிப்பு புள்ளி விவரங்கள் தரவு” என்கிற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
* இப்போது மாற்றங்களை செய்ய “முகவரி” விருப்பத்தை பயன்படுத்த வேண்டும். புதிய முகவரிக்கான தகவலையும் பதிவிட வேண்டும். அது இப்போது உங்கள் ஆதார் அட்டையில் தோன்றும்.
* கட்டணப் பக்கத்தில் தேவையான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
* உங்களுக்கு விருப்பப்பட்ட தகவலை அப்டேட் செய்தப் பின், SAVE செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு URN எண்ணை பயன்படுத்தி அப்டேட் செய்யப்பட்ட விவரங்களின் புதுப்பிப்பு நிலையை கண்காணித்துக் கொள்ளலாம்.