fbpx

”உண்மை என்னவென்று தெரியாமல் அறிக்கை விடாதீங்க”..!! ”அரசுப் பள்ளி மாணவர்கள் எங்கள் பிள்ளைகள்”..!! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!!

அரசுப் பள்ளி மாணவர்கள் எங்கள் பிள்ளைகள். அவர்களை தாரை வார்க்க மாட்டோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளர்.

500 அரசுப் பள்ளிகள் தனியார் மயமாக்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்திருந்தன. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்து வார்த்து கொடுப்பதாக நான் பேசவில்லை. உண்மை தன்மையை தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்கள் எங்கள் பிள்ளைகளை போல என்றும், அவர்களை தாரை வார்க்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளார். தனியார் பள்ளி விழாவில் முழுமையாக என்ன பேசப்பட்டது என்று கூட தெரியாமல் ‘கண்டிக்கிறோம்’ என்று அறிக்கை விடுபவர்களுக்கு என்னுடைய ‘வன்மையான கண்டனத்தை’ தெரிவிக்கிறேன். உங்களால் எங்களுடைய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்துக்கொண்டு பிறகு அறிக்கை விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தனியார் பள்ளி கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை பார்க்கப்படும் என்று அமைச்சர் பேசவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சியினர், ஆவேசமாக அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Read More : காதலனை அடித்து துரத்திவிட்டு காதலியை காட்டுக்குள் இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம்..!! வலியால் கதறி துடித்த பரிதாபம்..!!

English Summary

He has promised that government school students are like our children and that we will not castrate them.

Chella

Next Post

தேங்காய் பால் குடித்தால் மாரடைப்பு வராதா..? யாரெல்லாம் குடிக்கக்கூடாது..? நிபுணர் சொன்ன பதில்..

Thu Jan 2 , 2025
Coconut milk is rich in various nutrients needed by the body.

You May Like