திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரையிலான ஆண், பெண் இருபாலருக்கும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (மார்ச் 27) காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கு பெறுபவர்களுக்கு ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் போன்ற திட்டங்களில் இலவச பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
மேலும், தனியார் வேலை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகளுககு தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதால், 8ஆம் வகுப்பு முதல் பட்டய படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.