fbpx

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! வரும் 28ஆம் தேதி சிறப்பு முகாம்..!! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், வரும் அக்டோபர் 28ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள நிலையில், இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம்.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச் சான்று நகல்களுடன் புகைப்படத்தை எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Chella

Next Post

பெரும் சோகம்..!! நடிகர் நாகர்ஜுனாவின் சகோதரி காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

Thu Oct 19 , 2023
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வேங்கடராகவாபுரம் கிராமத்தில் வெங்கடரத்தினம், புன்னம்மாள் தம்பதிக்கு இளைய மகனாக 1924இல் நாகேஸ்வரராவ் பிறந்தார். இளம் வயதிலேயே நாடகத்துறையில் நுழைந்து பெண் வேடங்களில் நடித்தார். பின்னர் 1940இல் முதன் முதலாக “தர்மபத்தினி” எனும் தெலுங்கு சினிமாவில் நடித்து தனது திரைவாழ்க்கையை தொடங்கினார். இதுவரை அவர் 256 படங்களில் நடித்திருக்கிறார். இதில் ஒரு இந்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களும் அடங்கும். அன்னபூர்ணாவைத் திருமணம் செய்து […]

You May Like