fbpx

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! 8, 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கும் சூப்பர் வாய்ப்பு..!! இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!!

சென்னையில் இன்று (அக்.25) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களிலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து இன்று (அக்.25) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்தவுள்ளன.

இந்த முகாம் சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 8, 10, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

இந்த முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த முகாமினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

Read More : நவம்பர், டிசம்பரில் காத்திருக்கும் பயங்கர சம்பவங்கள்..!! 3 நாட்கள் இருளில் மூழ்கும்..!! மீண்டும் கற்காலத்தில் இருந்து வாழ்க்கை..!!

English Summary

A private sector employment camp will be held in Chennai today (October 25).

Chella

Next Post

பெண்களின் மார்பகங்களை ஆரஞ்சு பழங்களுடன் ஒப்பிட்டு விளம்பரம்!. கிளம்பிய சர்ச்சை!. விளம்பரத்தை நீக்கிய டெல்லி மெட்ரோ!

Fri Oct 25 , 2024
Ad comparing women's breasts to oranges!. The controversy started! Delhi Metro removed the advertisement!

You May Like