fbpx

அடிக்கும் வெயிலுக்கு தென்னங்குருத்தை எங்காவது பார்த்தால் மிஸ் பண்ணிடாதீங்க!… மருத்துவ பயன்கள் இதோ!

தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தென்னங்குருத்தில் உள்ள மருத்துவ நன்மைகளை இந்த தொகுப்பில் அறிந்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ முயற்சிப்போம்.

தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தென்னம்பூ, இளநீர், தென்னை ஓலை, தென்னங்குருத்து, தேங்காய், தேங்காய்ப்பூ, என அனைத்தும் மருத்துவ பயன்களை அள்ளித்தருகிறது. இருப்பினும், இதன் மருத்துவ பயன்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அந்தவகையில் தென்னங்குருத்தின் பயன்களை தெரிந்துகொண்டால் சாலையோரங்களில் விற்கபடுவதை பார்த்துவிட்டு கடந்துசெல்லமாட்டீர்கள். பொதுவாக பொள்ளாச்சி, மதுரை, கேரளா உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் விற்கப்படும் தென்னங்குருத்தில் உள்ள பல்வேறு மருத்தவ குணங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வயிற்று வலி கொண்டவர்கள் இந்த தென்னங்குருத்தை சாப்பிடலாம். இதனை வாரத்தில் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சில வாரங்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குணமாகும். தவிர வயிற்றில் இருக்கும் புண்களையும் ஆற்றும் பண்புடையது. சிறுநீரக பிரச்சனைகளில் ஒன்றான சிறுநீரக கல் பாதிப்பால் ஏராளமானவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை கரைக்க தெடர்ந்து தென்னக்குருத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் கறியும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள்.கோடை வெப்பத்திற்கு நம்மில் அதிகமானோர் உடல் உஷ்ணத்தினால் பாதிப்பு அடைகிறோம். இதனை தடுக்கவும், உடலின் தட்பவெப்பத்தை சீராக வைத்துக் கொள்ளவும் தென்னங்குருத்தை சாப்பிடலாம்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயினால் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கும் தென்னங் குருத்தும், தென்னம்பூவும் வரப்பிரசாதம் என்றே கூறலாம். தயிரில் சிறிது தென்னம்பூவை சேர்த்து அரைத்து பருகி வர மாதவிடாய் வலிகள் மற்றும் தொற்றுகள் விரைவில் சரியாகும். அதோடு மாதவிடாய் சுழற்சி யில் பிரச்சினைகள் இருப்பின், விரைவில் சரியாகும்.மஞ்சள் காமாலை இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் அதன் தாக்கத்தினை அதிகப் படுத்தாமல் பார்த்துக் கொள்ளும் தவிர சிறுநீர் வராமல் கஷ்டப்படுவோர் தென்னங்குருத்து மிகச்சிறந்த மருந்தாகும்.

Kokila

Next Post

வாட்டும் வெயில்!... உடல் சூட்டினால் வரும் நோய்களில் இருந்து பாதுகாக்க!... கருப்பட்டியை இப்படி பயன்படுத்துங்கள்!

Sun Apr 2 , 2023
கோடைக்காலத்தில் வெயிலினால் ஏற்படும் உடல் சூட்டு நோய்களில் இருந்து பாதுகாக்க கருப்பட்டி பெரிதும் உதவுகிறது. இதன் நன்மைகள் என்ன அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அந்தகாலத்தில் கருப்பட்டியில் தான் தேனீர் தயாரித்து அருந்துவார்கள். இதுமாதிரி நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை மேற்கொண்டு வந்ததால்தான் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழ்ந்து வந்தனர். ஆனால், இதன் நன்மைகள் தெரியாமல் இன்றைய தலைமுறையினரால் காலப்போக்கில் கருப்பட்டியின் பயன்பாடு […]

You May Like