பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி, கள்ளக்காதலியே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்குளத்தான்விளையை சேர்ந்தவர் ரவுடி பரமேஷ்வரன் (வயது 37). இவர், முன்னாள் கப்பல் ஊழியரும் ஆவார். தற்போது சொந்த ஊரில் வசித்து வரும் இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே, இவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் பெண் ஜான்சிக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
அப்போது, அந்த பெண்ணிடம் இருந்து கள்ளக்காதலன் பரமேஷ்வரன், அடிக்கடி செலவுக்கு பணம் வாங்கி வந்துள்ளார். இதற்கிடையே, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருந்துள்ளனர். அப்போது, தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு பரமேஷ்வரனிடம் ஜான்சி கேட்டுள்ளார். ஆனால், அவர் திருப்பித் தரவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஜான்சி, வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து பரமேஷ்வரனின் முகத்தில் தூவியுள்ளார். பின்னர், அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன பரமேஷ்வரன், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், விசாரணை நடத்தினர். பரமேஷ்வரனை கள்ளக்காதலி வெட்டிக்கொன்றது எதிர்பாராமல் நடந்ததா..? அல்லது திட்டமிட்டமிட்ட படுகொலையா..? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது. ஏனென்றால், பரமேஷ்வரனை தப்பிவிடக் கூடாது என்பதற்காக அவர் முகத்தில் மிளகாய் பொடியை தூவியுள்ளார்.
இதனால் கண் எரிச்சல் ஏற்பட்டு அவரால், சரியாக ஓடி தப்பிக்க முடியவில்லை. எனவே, இந்த கொலையில் அந்த பெண்ணின் கணவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். பரமேஷை கொலை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டது போல தெரிகிறது. இதனால், ஜான்சி மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.