fbpx

இனிமேல் பீன்ஸை ஒதுக்காதீர்கள்!… இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?… மூல நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது!

புற்று நோயைக் குணப்படுத்துவது முதல் மூல நோயை கட்டுப்படுத்துவது வரை பல்வேறு நோய்களுக்கு சிறந்த உணவாக பீன்ஸ் உள்ளது. இதன் மருத்துவ பயன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்தானது 9% சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. பீன்ஸ் மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த உணவாகும்.புற்று நோயைக் குணப்படுத்துவதில், பீன்ஸ் அதிகம் பயன்படுகிறது. பீன்ஸில் வைட்டமின் பி6, தையின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் பீன்சை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் நீரழிவால் உண்டாகும் பாதிப்புகள் குறையும். வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும் போது அது மூல வீக்கத்தை ஏற்படுத்தி மூல வியாதியைத் தோற்றுவிக்கும்.குடல் புண், வாய்ப்புண் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பீன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும் மூலம். மூல நோய்கள் உள் மூலம், வெளிமூலம் என இரு வகைப்படும். உள் மூலத்தில் மேல் பகுதி இரத்தக் குழாய்களும் வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி இரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க பீன்ஸ் பெரிதும் உதவுகிறது. ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் மெதுவாகக் கரைவதன் காரணமாக, இரத்தத்தில் அளவுக்கு அதிகமாகச் சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.பீன்ஸை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, அதைப் பருகி வந்தால் நீண்ட நாள் ஆறாத வாய்ப்புண் விரையில் குணமடையும். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பீன்ஸ் சிறந்த உணவு. பீன்ஸ் இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது. செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். பீன்ஸில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

Kokila

Next Post

கோடைக்காலம்!... நாம் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாதிப்புகளும்!... தீர்வுகளும்!

Fri Mar 31 , 2023
கோடைக் காலத்தில் நாம் நம்மை அறியாமல் செய்யும் தவறுகளைத் திருத்தி, சரியான ஆரோக்கியத்தை பேணுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம். கோடைக் காலத்தில் அதிகரிக்கும் சூட்டால், தலைவலி குமட்டல், வெப்ப பக்கவாதம், de-hydration, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே தான் கோடைக்காலம் வந்த உடன் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமானதாக உள்ளது.கோடைக் காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். ஒவ்வொரு […]

You May Like