fbpx

இனிமேல் செல்போனை கழிவறைக்கு எடுத்து செல்லாதீர்கள்!… ஆசனவாய் பிரச்சனை!… ஆய்வுகள் கூறும் உண்மை!

சிறுநீர் கழிக்க செல்லும் போதோ அல்லது வேரு வேலைகளுக்காக கழிவறைக்கு செல்லும் போதோ நம்மில் பலர் செல்போனை எடுத்துக்கொண்டு செல்வது வழக்கம். அந்த சிலரில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் இதை நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். புள்ளி விவரத்தின்படி, ஜென் Z எனக்கூறப்படும் இந்த கால இளசுகள் இதில் அதிகம் பேர். அமெரிக்காவில் இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அந்த நாட்டில் உள்ள பல பேர் கழிவறைக்கு செல்லும் போது செல்போனை எடுத்து செல்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

கழிவறைக்கு சென்று விட்டு வெளியில் கால் வைக்கும் முன்னர் கை கால்களை கழுவதை பலர் வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால், கை-கால்களை கழுவுபவர்கள் அவர்கள் கையுடன் எடுத்ட்துச்செல்லும் செல்போன்களை சுத்தம் செய்வதில்லை. இப்படி கழிவறைக்கு போனை எடுத்துச்செல்பவர்களில் 16.5 சதவிகிதம் பேர்தான் தங்கள் செல்பேசிகளை சுத்தம் செய்கின்றனரார். இதனால், கழிவறையில் இருக்கும் பாக்டீரியாக்கள் போனில் தொற்றிக்கொண்டு நோய் பாதிப்பை உருவாக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதுகுறித்து ஆரிசோனா பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், ஒரு டாய்லட் சீட்டில் இருப்பதை விட கழிவறைக்கு எடுத்துச்செல்லும் செல்போனில் 10 மடங்கு அதிக கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கழிப்பறையிலிருந்து மொபைல் போனுக்கு கிருமிகள் பரவும் அபாயம் அதிகம் உள்ளது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இது, வாந்தி, டைரியா போன்ற பல உடல் உபாதைகளை உருவாக்குமாம். இப்படியே நாம் தொடர்ந்து செய்தால் நம் உணவில் நமக்கே தெரியாமல் கெட்ட பாக்டீரியாக்கள் கலந்து, நாம் சாப்பிடும் உணவுகளை விஷமாக மாற்றலாம். கழிவரையின் இருக்கையில் அதிக நேரம் உட்காருவதால் நம் பின்பகுதியில் உள்ள தசையில் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது. கழிப்பறை இருக்கையில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது, சிரமப்படும் நேரத்தை அதிகரிப்பதன் மூலம் மூல நோய் அபாயத்தை அதிகரிக்குமாம்.

செல்போனுடன் டாய்லட் சீட்டில் உட்காரும் போது நாம் எதற்கு வந்தோம் என்பதையே மறந்து சமயங்கலில் போனை உபயோகிக்க ஆரம்பித்து விடுவோம். இதனால் நாம் நினைக்கும் நேரங்களில் மலம் கழிக்க முடியாது. இது, ஆசனவாய் பிரச்சனைகளில் கொடு வந்து விட்டுவிடும். மேலும், நீண்ட நேரம் அங்கு அமருவது உடலுக்கும் கேடு.

செல்போன் பயன்பாட்டை குறைக்க டிப்ஸ்: செயலின் அல்லது தொலைபேசியின் தேவையில்லாத நோட்டிஃபிக்கேஷன் மியூட் செய்து விடுங்கள். கவன சிதறலை உண்டாக்கும் அல்லது அதிகம் உபயோகிக்கும் உபயோகமே இல்லாத செயலியை போனில் இருந்து தூக்குங்கள். செயலிக்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கும் ஆப்ஷன் அனைத்து போன்களிலும் உள்ளது. அதை உபயோகப்படுத்தி கொள்ளுங்கள்.
-போனிடமிருந்து தள்ளியிருங்கள். செல்போன் உபயோகிக்க தோன்றினால் அந்த தேடலை வேறு வேலையில் செலுத்துங்கள்.

Kokila

Next Post

2024 நாடாளுமன்ற தேர்தல்...! அண்ணாமலையின் பாதயாத்திரை தமிழகத்தில் மாற்றத்தை உண்டாக்கும்...!

Sat Jul 29 , 2023
தமிழகத்தில் அண்ணாமலையின் பாத யாத்திரை மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை (ஜூலை 28) நடைபெற்ற என் மண் என் மக்கள் பாதையாத்திரை தொடக்க விழாவில்; பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் திமுக காப்பாற்றி வருவதாக தமிழக முதல்வர் […]

You May Like