fbpx

மக்காசோளத் தோகையை இனிமேல் தூக்கி எறியாதீர்கள்!… ஏராளமான நன்மைகள் அடங்கிய கார்ன் டீ தயாரிப்பது எப்படி?

நிறைய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ள மக்காசோளத் தோகையில் எப்படி டீ தயாரித்து குடிக்கலாம், என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மக்காசோளத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனை வேகவைத்தோ அல்லது தீயில் சுட்டோ பல்வேறு விதமாக சமைத்து உட்கொண்டுவருகிறோம். இதன் பயன்கள் எண்ணிலடங்காதவை என்பது எத்தனை பேருக்கு தெரியும்? நாம் விரும்பி சாப்பிடும் மக்காசோளம் நமது உடம்பிற்கு தேவையான தினசரி நார்ச்சத்து தேவையை முழுமையாக அடங்கிய தானியமாக உள்ளது. இதில், வைட்டமின் பி சத்துகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக டயாமின், நியாசின் ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இதனால் மக்காசோளத்தை உட்கொள்வதால், அடிக்கடி வயிற்றுபோக்கு ஞாபக மறதி தோல் சம்பந்தமான வியாதிகள் உள்ளிடவைகள் நீங்கி உடலை வலுப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதேபோல அதனுடைய மென்மையான தோகையிலும் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதில் எப்படி டீ தயாரித்து குடிக்கலாம், என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

மக்காச்சோள தோகையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, வைட்டமின் ஏ, பி2, சி, ஈ, மற்றும் கே ஆகியவை நிறைந்திருக்கின்றன. அதோடு கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட மினரல்களும் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகளும் நிறைந்திருக்கின்றன.மக்காச்சோளத்தில் உள்ள பட்டு போன்ற இந்த மென்மையான தோகையைப் பயன்படுத்தி டீ செய்து குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் வெளியேறும்.இந்த டீயை தினமும் அரை கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தேநீர் உடலில் இன்சுலின் சுரப்பை குறைத்து சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. சிறுநீரகத்தை சுத்தம் செய்யவும் இந்த மக்காளச்சோள சோகை டீ உதவ செய்யும். அதோடு சிறுநீரகக் கற்களை உண்டாக்கும் அபாயயத்தைக் குறைக்கும். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த டீ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த டீயில் குடிப்பதால் உடலில் சேரும் நைட்ரேட்டும் வெளியேற்றப்பட்டு, சிறுநீரக கற்கள் பிரச்சனையைத் தவிர்க்கிறது.

தோகையில் நிறைய ஊட்டச்சத்துக்களும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் நிறைந்திருக்கின்றன. இதிலுள்ள ஆன்டி இன்பிளமேஷன் பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கங்கள் மற்றும் தொற்றுக்களுக்கு எதிராகப் போராடி நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.தண்ணீர் நன்றாகக் கொதித்து வரும்போது அதில் மக்காச்சோளத்தில் உள்ளே இருக்கும் பட்டு போன்ற அந்த முடியைப் போட்டுக் கொதிக்க விடுங்கள்.நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அப்படியே மூடி வைத்துவிடுங்கள்.பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் அதில் எலுமிச்சை சாறு சேர்த்தால் டீ தயார். இந்த டீயை ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம். குடிக்கும்போது மட்டும் லேசாக சூடேற்றிக் கொள்ளுங்கள்.

Kokila

Next Post

காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொண்டை புண் சரியாக!... இந்த கஷாயத்தை டிரை பண்ணுங்க!... உடனடி தீர்வு!

Mon Mar 6 , 2023
காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் மிளகு கஷாயம். தயாரிக்கும் எளிய முறையை பற்றி தெரிந்துகொள்வோம். பொதுவாக சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்றாக மிளகு உள்ளது. இந்த கருமிளகை பிளாக் கோல்ட் என்றும் அழைக்கப்படுகிறது. து நெடி ஏற்றும் லேசான காரமான சுவை கொண்டது, இது பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழங்கால ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மாசுபாடு, […]

You May Like