மின்சார கட்டணத்தை குறைக்க ஃபிரிட்ஜ் ஸ்விட்சை இரவு நேரங்களில் அணைத்து வைப்பதால் உணவுப்பொருட்களில் பூஞ்சை தொற்று உருவாகும், அதை நாம் சாப்பிடுவதால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படும்
நாம் பயன்படுத்தும் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவைதான் அதிக மின்சார பயன்பாடுக்கு காரணமாகிறது. இதனால் மின் கட்டணத்தை குறைக்க மக்கள் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர். அந்தவகையில் மின் கட்டணத்தை குறைக்க சிலர் பிரிட்ஜை இரவு நேரங்களில் நிறுத்தி வைத்துவிடுகிறார்கள். இது அதன் உள்ளே இருக்கும் பொருட்களுக்கு நல்லதா என்ற கேள்வி எழுகிறது. உணவு பொருட்களையும் குளிர்பானங்களையும் கெட்டு போகாமல் பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும் பிரிட்ஜை, இரவு நேரத்திலோ வெளியூர் செல்லும் போதோ அணைத்து வைத்தால் அதில் உள்ள உணவு பொருட்கள் கெட்டுவிடும்.
பிரிட்ஜை அணைத்தால் அதில் 2 முதல் 3 மணி நேரம் வரை உள்புற கூலிங் இருக்கும். அதே பிரிட்ஜை 5 அல்லது 6 மணி நேரத்திற்கு இரவு நேரத்தில ஆப் செய்து வைக்கலாம் என நீங்கள் கருதினால் அது உணவு பொருட்களை கெட்டு போக வைக்கும். பிரிட்ஜின் உள்ளே அதிக வெப்பநிலை காரணமாக பூஞ்சைகள் வளரத் தொடங்கும். இதனால் பூஞ்சை பாதித்த உணவு வகைகளை நாம் உட்கொண்டால் நமது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும். பிரிட்ஜை அணைத்தால் உள்புறத்தில் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கும். பிறகு பிரிட்ஜை ஆன் செய்யும் போது கம்ப்ரஸ்ஸர் பிரிட்ஜின் உட்புறத்தை கூலாக்க பல நேரம் எடுக்கும். அப்போது கரன்ட் பில் அதிகரிக்கும்.
எனவே இரவு நேரத்தில் பிரிட்ஜை அணைத்து வைத்தாலும் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. தற்போது நவீன பிரிட்ஜ்கள் வந்துள்ளன. இவை தெர்மோஸ்டேட் ஆட்டோ கட் ஆப் ஆப்ஷனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரிட்ஜ் குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்தவுடன் கம்பரஸ்ஸரை ஆஃப் செய்துவிடும். இதனால் உங்கள் பிரிட்ஜும் கூலாக இருக்கும். மின்சாரமும் சிக்கனமாக பயன்படும்.