காதுகளில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இயர்பட்ஸ் பயன்படுத்துவது உண்டு. இருப்பினும், உங்கள் காதில் இயர்பட்ஸ்களை பயன்படுத்துவது ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒருவர் காதுக்கு பட்ஸ் பயன்படுத்தும்போது அது காதில் உருவாகி உள்ள மெழுகை ஆழமாக உள்ளே தள்ளும். எனவே, இதனால் உங்கள் காதில் அடைப்பு ஏற்படும். மேலும், இந்த இயர்பட்கள் காதின் உட்பகுதியில் உள்ள மென்மையான தோலில் எரிச்சல், வீக்கம் மற்றும் தொற்றுநோய் அபாயங்களை கூட ஏற்படுத்தலாம். இயர்பட்களை தவறாகப் பயன்படுத்துவதால், காதில் உள்ள மெழுகு இறுக்கமாக மாறி உள்ளே சென்று காது அடைப்புக்கு வழிவகுக்கும். இதனால் ஒருவருக்கு காது கேளாமை, காது வலி, டின்னிடஸ் மற்றும் தலைவலி போன்ற மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
உங்களது காதில் இயர்பட்களை பயன்படுத்துவதால் அது பாக்டீரியாவை உள்ளே செல்ல வழி செய்கிறது. இதனால் உங்களுக்கு இது வலிமிகுந்த நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். காதின் உட்புற பாதுகாப்பு மற்றும் சென்சிட்டிவான பகுதிகளில் இயர்பட்ஸ் பயன்படுத்துவது ஏற்றதல்ல. மேலும், இயர்பட்களை தவறாக கையாளுவது, காது கேட்கும் திறனையும் பாதிக்கும். காதுகளை சுத்தமாக வைக்க சில பலவிதமான பராமரிப்பு முறைகளை நீங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், காதில் உள்ள அதிகப்படியான மெழுகு பொதுவாக Ear canal-லிருந்து தானாகவே வெளியேறும். ஒருவேளை, நீங்கள் சுத்தம் செய்ய விரும்பினால், குளித்த பிறகு சுத்தமான மற்றும் ஈரமான துணியால் வெளிப்புற காதை மெதுவாக துடைத்தால் மட்டுமே போதுமானது.