மக்களவை தேர்தல் காரணமாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலின்போது, ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுப்பது வழக்கம். அப்படி இல்லாவிட்டாலும் எனது நண்பர் அடைக்கலராஜ் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமாவது ஒரு போஸ்டர் பரபரப்பை கிளப்பும். இதனாலேயே நான்கு முறை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் அடைக்கலராஜ் வெற்றி பெற்றார் என்பவர்களும் உண்டு.
இந்நிலையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல் தான், எங்கள் இலக்கு என்று வெளிப்படையாக விஜய் தெரிவித்து விட்டாலும், தமிழ்நாட்டில் பிரிவினை ஏற்படுத்தும் திராவிட கட்சிக்கு யாரும் லோக்சபா தேர்தலில் ஓட்டு போடவேண்டாம் என்று, தமிழக வெற்றிக் கழகம் பெயரில் அறிக்கை ஒன்று மார்ச் 31ஆம் தேதி வெளியானது
இதை தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “சமூக வலைதளங்களில் வெளியான அறிக்கை முற்றிலும் போலியானது அந்த அறிக்கை நாங்கள் வெளியிடவில்லை. கட்சியின் தொண்டர்கள் யாரும் இந்த செய்தியை நம்ப வேண்டாம்” என தெரிவித்துளார். அது சரிங்கண்ணா புஸ்ஸி ஆனந்துனு போட்ட உங்க பேர்ல மீண்டும் வந்திருக்கே இதுவாவது உண்மையா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Read More : தம்பி..!! இந்த சேட்டை எல்லாம் என்கிட்ட வெச்சிக்காத..!! அண்ணாமலையை எச்சரித்த சீமான்..!!