fbpx

’ஆளுநர் பதவியே வேண்டாம்’…!! ’விரைவில் ஆட்சி மாற்றம்’..!! திமுக மாநாட்டின் 25 தீர்மானங்கள்..!!

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்று வருகிறது. இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 25 தீர்மானங்களை உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார்.

தீர்மானம் – 1

இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதி அளித்த ஜனநாயக பாதுகாவலர் தமிழக முதல்வருக்கு நன்றி.

தீர்மானம் – 2

தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக நீடிக்க அயராது பாடுபடும் முதல்வருக்கு இளைஞரணி என்றும் துணை நிற்கும்.

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெற இளைஞரணி பாடுபடும். நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் 2 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய முதல்வருக்கு நன்றி. இந்தியாவுக்கே முன்னோடி திட்டமான காலை உணவு திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சருக்கு நன்றி. மகளிர் உரிமைத்தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திமுக அரசின் திட்டங்களை பாராட்டி தீர்மானம் உள்ளிட்ட முதல் 12 தீர்மானங்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள்.

தீர்மானம் -13

நீட் தேர்வை ஒலிக்கும் வரை போராடுவோம். நீட் தேர்வு ஒலிப்பில் இறுதி வெற்றி அடையும் வரை இளைஞரணி போராடும்.

தீர்மானம் – 14

குலக்கல்வி முறையை ஒழிக்க இளைஞரணி பாடுபடும்.

தீர்மானம் – 15

கல்வி, மருத்துவம், மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் .

தீர்மானம் -16

முதல்வரே பல்கலைக்கழக வேந்தர். சட்ட முன்வடிவை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தீர்மானம் – 17

ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.

தீர்மானம் – 18

தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகளில் தமிழர்களை நியமிக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும்.

தீர்மானம் – 19

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.

தீர்மானம் – 20

மாநில சுயாட்சி அடிப்படையில் உட்சபட்ச அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.

தீர்மானம் – 21

அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை கைபாவையாக்கிய மத்திய அரசுக்கு கண்டனம்.

தீர்மானம் – 22

நாடாளுமன்ற எம்பிக்களை இடைநீக்கம் செய்யும் மத்திய அரசுக்கு கண்டனம்.

தீர்மானம் – 23

இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக என்பதை அம்பலப்படுத்துதல். ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தி இரட்டை வேடம் போடுகிறது.

தீர்மானம் – 24

பாஜக ஆட்சியை ஒழிக்க இளைஞரணி முன்கல பணியாளர்களாக செயல்படும்.

தீர்மானம் – 25

ஆட்சி மாற்றத்திற்கான சூழல் உருவாகியுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை ஓய மாட்டோம்.

Chella

Next Post

இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க என்பதை அம்பலப்படுத்துவோம்...! திமுக‌ தீர்மானம்...

Sun Jan 21 , 2024
திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்; இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதியளித்த ஜனநாயகப் பாதுகாவலர் கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி. கூட்டாட்சிக் கொள்கைக்கு வலிமை சேர்க்கும் வகையில், இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் பெரும்பொறுப்பில் எவ்வித சமரசமுமின்றிப் பாடுபடும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கை […]

You May Like