fbpx

”காரை கையால் கழுவக் கூடாது, நிர்வாணமாக டிரைவ் செய்யலாம்”..!! வியக்க வைக்கும் போக்குவரத்து விதிமுறைகள்..!! எங்கு தெரியுமா..?

தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சிலருக்கு எரிச்சலை உண்டாக்கும் விஷயமாக உள்ளது. அதிலும் சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. சிவப்பு விளக்குகளில் நிறுத்துவது, நடப்பவர்களுக்கு வழிவிடுவது, வேக எல்லையை கடைபிடிப்பது போன்றவை அடிப்படை விதிகளாகும். ஆனால், ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென சொந்த சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன.

ஒரு நாட்டில் உள்ள சட்டங்கள் மற்றவர்களுக்கு வினோதமாகத் தோன்றலாம். ஆனால் அவற்றைப் புரிந்துகொள்வது உங்கள் பயண அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, வெளிநாட்டு சாலைகளில் சிக்கலில் இருந்து விலகி இருக்கவும் உதவும். உங்களை ஆச்சரியப்படுத்தும் வெளிநாடுகளில் உள்ள சில வினோதமான போக்குவரத்து விதிமுறைகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

* ரஷ்யா தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு. அதன்படி ரஷ்யாவில், அழுக்கு கார் ஓட்டி பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படும். அதாவது ஓட்டுநர்களுக்கு 2,000 RUB (இந்திய ரூபாயில் 1,724) அபராதம் விதிக்கப்படும்.

* ஸ்வீடனில், பகலில் கூட உங்கள் ஹெட்லைட்களை எரிய வைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில், பகலில் கூட சுற்றுப்புற ஒளியின் அளவு குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். அங்கு பெரும்பாலான நவீன கார்களில் தானியங்கி ஹெட்லைட்கள் உள்ளன. ங்கள் அவற்றை அணைக்காத வரை அவை எரிந்து கொண்டே இருக்கும்.

* பெரும்பாலான நாடுகளில் வாகனம் ஓட்டும்போது குடிப்பதைத் தடைசெய்யும் சட்டங்கள் உள்ளன, இருப்பினும் சைப்ரஸ் அதை ஒரு படி மேலே கொண்டு போயுள்ளது. வாகனம் ஓட்டும்போது குடிப்பது அல்லது சாப்பிடுவது கூட சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. இந்த தவறை செய்து வாகன ஓட்டிகள் பிடிபட்டால், 85 யூரோ(இந்திய மதிப்பில் 7,727) அபராதம் செலுத்த வேண்டும்.

* நியூயார்க்கில் தேவையில்லாமல் ஹார்ன் எழுப்புவது சட்டவிரோதமானது. இதற்கு $350 வரை அபராதம் விதிக்கப்படலாம். ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தில் பிளாக் மார்க்குகளை எதிர்கொள்ளலாம்.

* ஜப்பானில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் உள்ளன. ஒருவேளை குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபட்டால், ஓட்டுநருக்கு மட்டும் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுவதில்லை. அவர்களுடன் பயணித்தவருக்கும் அபராதம் விதிக்கப்படும்.

* சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் உங்கள் காரைக் கையால் கழுவுவது சட்டவிரோதமானது. ஏனென்றால், ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளாகக் கருதப்படுகிறது, இந்த நாளில் உங்கள் காரைக் கழுவ தடை செய்யப்பட்டுள்ளது.

* பெலாரஸில் 2 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களில், உங்கள் சொந்த தீயை அணைக்கும் கருவியை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். மேலும் முதலுதவி பெட்டி, எச்சரிக்கை முக்கோணம், உங்கள் காரின் வெளிப்புற விளக்குகளுக்கான உதிரி பல்புகள், ஹெட்லேம்ப் மாற்றிகள் மற்றும் ஸ்டெப்னி போன்ற பொருட்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.இருக்க வேண்டும்.

ஜெர்மனியில் கார் ஒரு “தனியார் இடம்” என்று கருதப்படுகிறது, எனவே அங்கு நிர்வாணமாக கார் ஓட்டுவது அனுமதிக்கப்படுகிறது. காரில் இருந்து இறங்கும் போது மட்டுமே, ஓட்டுநர்கள் எதையாவது ஆடை அணிய வேண்டும். ஏனெனில் இந்த சமயத்தில் அவர்கள் ஒரு பொது இடத்திற்குள் நுழைகிறார்கள். மேலும், நிர்வாணமாக இருப்பது அப்போது குற்றமாகும்.

பிலிப்பைன்ஸில் விரும்பிய நாளில் வாகனம் ஓட்ட முடியாது. உங்கள் லைசென்ஸ் பிளேட் 1 அல்லது 2 இல் முடிவடைந்தால், திங்கட்கிழமை அன்று பிலிப்பைன்ஸ் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானதாகும்.

Read More : விஜய்யின் அடுத்த மூவ்..!! டிசம்பர் 27 முதல் அனல் பறக்கும் அரசியல் களம்..!! பக்கா பிளானுடன் களமிறங்கும் தவெக..!!

English Summary

Unnecessary honking is illegal in New York. This can result in a fine of up to $350.

Chella

Next Post

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வை உடனடியாக நடத்த வேண்டும்...! தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை

Sat Nov 2 , 2024
The post graduate teacher competitive examination should be conducted immediately

You May Like