தங்கம் யாருக்கு தான் பிடிக்காது. எவ்வளவு தங்கம் வாங்கினாலும் போதும் என்ற மனப்பான்மை வராது. குறிப்பாக பெண்களுக்கு, எதையாவது தங்கத்தில் வாங்கி விட வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி வந்தது தான் தங்க பொட்டு. இது கேட்பதற்க்கு சற்று ஆச்சர்யமாக தான் இருக்கும். ஆனால் உண்மை. பெண்களின் மனநிலையை நன்கு புரிந்து கொண்ட கடைக்காரர்கள் பொட்டை கூட தங்கத்தில் கொண்டு வந்துவிட்டார்கள். இயற்கையாகவே தங்கத்துக்கு உறுதித் தன்மை அதிகம். அது நம் உடலோடு ஒட்டி கிடப்பதால், நமக்கு மனபலம் உண்டாகும். முற்காலத்தில் தங்கத்தில் ஆபரணங்கள் செய்யப்பட்மைக்கு இதுவே உண்மையான காரணம்.
மேலும், தங்க ஆபரணங்களை நம் உடலில் ஒவ்வோர் பகுதியிலும் அணிவதற்கு தனித்துவம் வாய்ந்த காரணங்கள் உள்ளது. அந்த வகையில், நமது முன்னோர் தங்கத்தை காலில் அணியக்கூடாது என கூறுவார்கள். காரணம் இன்றி நமது முன்னோர்கள் எதையுமே சொல்லி வைகக்கவில்லை. ஆனால் நாம் தான், அறிவியல் ரீதியாக நம் முன்னோர் கூறிய விஷயங்களை மூட நம்பிக்கை என்று விட்டுவிடுகிறோம். இப்போது ஏன் நாம் தங்கத்தை காலில் அணிய கூடாது என்பது பற்றி பார்ப்போம்..
ஆன்மீக ரீதியாக, தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிற காரணத்தால் அதை ஆபரணங்களாக கால்களில் அணியக் கூடாது என்று கூறுவார்கள். கொலுசு, மெட்டி போன்றவற்றை வெள்ளியில் தான் அணிய வேண்டும் என கூறுவதற்கு அறிவியல் ரீதியான காரணமும் உள்ளது. காலில் தங்கம் இருந்தால் வாத நரம்புகள் தூண்டிவிடப்பட்டு உடலில் வீக்கமும் வலியும் ஏற்படுகிறது. இதற்கு அறிவியல் ஆதாரங்களும் உள்ளது. அதனால் தான் நம் முன்னோர்கள் வாதத்தை கட்டுப்படுத்தி சமமாக வைக்கும் வெள்ளியை காலில் அணிந்து வந்தார்கள். இதுவே, காலில் தங்கம் அணியாதமைக்கு உண்மையான அறிவியல் ரீதியான காரணம்.