fbpx

இனி செல்போன் தொலைந்துவிட்டால் கவலை வேண்டாம்..!! மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம்..!!

தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இப்போது அதை எளிதாக்கி திருடப்பட்ட, தொலைந்த மொபைலை மீட்க புதிய வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. சிஇஐஆர்(CEIR) என்ற தொழில்நுட்ப அமைப்பின் இந்த வசதி நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு மாநிலங்களில் இந்த வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது நாளை முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த வசதியின் மூலம் மொபைல் போன்கள் திருடு போனால் அவற்றை முடக்க முடியும் என்பதோடு டிராக் செய்யவும் முடியும். எனவே, மொபைல் தொலைந்து விட்டால் சிஇஐஆர் இணைய சேவை மூலமாக மீட்க, புகாரளித்த எப்.ஐ.ஆர் நகலை பயனர்கள் பதிவிட வேண்டும். அதேபோல செல்போனின் மாடல், ஐஎம்இஐ (IMEI) எண்கள், திருடப்பட்ட இடம், செல்போன் எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும். தகவல் சரியாக இருந்தால் 24 மணி நேரத்துக்குள் செல்போன் முடக்கப்படும். பின்னர் அவற்றை கண்காணித்து மீட்கும் நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கள்ளச்சாராய விவகாரம்..!! முழுமையாக கட்டுப்படுத்த முடியாது..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி..!!

Tue May 16 , 2023
கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 66 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாடு, புதுச்சேரி ஜிப்மரில் இதுவரை 66 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 55 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரிய முறையில் சிகிச்சை கிடைப்பதை […]
கள்ளச்சாராய விவகாரம்..!! முழுமையாக கட்டுப்படுத்த முடியாது..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி..!!

You May Like