இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ஏனெனில், மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். இந்நிலையில், ரயிலில் பயணம் செய்யும்போது ஒருவேளை உங்களுடைய லக்கேஜ் தொலைந்து விட்டால், அது நமக்கு கெட்டதொரு பயணமாக அமைந்து விடும். ஆனால், லக்கேஜ் தொலைந்தாலும் அதைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம். அதாவது நீங்கள் ரயிலில் பயணம் செய்யும்போது ஒரு வேலை உங்கள் லக்கேஜ் தொலைந்து விட்டால், உடனடியாக நீங்கள் அது பற்றி புகாரளிக்க வேண்டும். நீங்கள் புகார் கொடுப்பதற்கு ரயில் நடத்துனர், உதவியாளர், காவலர் அல்லது ஜிஆர்பிஎஸ் கார்டை அணுக வேண்டும். இவர்கள் மூலம் உங்களுடைய புகார் எஃப்ஐஆர் ஆக பதிவு செய்யப்படும்.
நீங்கள் புகார் தெரிவிக்க ஒரு படிவம் தரப்படும். அந்த படிவத்தை நிரப்பி கொடுத்த பிறகு மேல் நடவடிக்கைக்காக காவல்நிலையத்திற்கு அனுப்பப்படும். ஒருவேளை நீங்கள் விரும்பினால் உங்களுடைய புகார் கடிதத்தை நீங்கள் செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையத்தில் இருக்கும் ஆர்பிஎஃப் அதிகாரிகளிடம் கொடுக்கலாம். ரயில்வே விதிகளின் படி லக்கேஜ்கள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டால் விசாரணை நடத்தப்படும். ஆனால், இதற்கு சற்று காலதாமதம் ஆகும். இருப்பினும் நீங்கள் தொலைத்த பொருட்களுக்கான நிவாரணத் தொகை உங்களுக்கு முழுமையாக கிடைத்து விடும். மேலும், லக்கேஜை முன்பதிவு செய்யாமல் நீங்கள் சீட்டுக்கு அடியில் வைத்து பயணம் செய்தால் உங்களுக்கு ரூ.100 மட்டும் தான் இழப்பீடு கிடைக்கும்.