தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் அதிக கெடுபிடி இல்லாமல் வியாபாரிகளுக்கு சிறு வணிக கடன் வழங்கப்பட்டு வருகிறது. பூக்கடை மற்றும் பல வியாபார கடை என நடத்தும் சிறு வியாபாரிகளுக்கு அதிகபட்ச ரூ.50,000 வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில், மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், சாலைகளில் கடை வைத்திருந்த சிறு வியாபாரிகளின் கடைகள் தண்ணீரில் மூழ்கியதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறு வணிக பிரிவில் அதிக எண்ணிக்கையில் கடன் வழங்க வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.