fbpx

’மருந்து இல்லையென சீட்டு எழுதி கொடுக்கக் கூடாது’..!! துணைநிலை ஆளுநர் தமிழிசை அதிரடி..!!

’ஜிப்மர் மருத்துவமனையில் மருந்துகள் இல்லை என்று சீட்டு எழுதி கொடுக்கக் கூடாது’ என அறிவுறுத்தி உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் புகழ்பெற்ற மருத்துவமனையான ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு என செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு என புகார்கள் வந்ததை அடுத்து ஆலோசனை நடத்தினோம். மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஜிப்மரில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

’மருந்து இல்லையென சீட்டு எழுதி கொடுக்கக் கூடாது’..!! துணைநிலை ஆளுநர் தமிழிசை அதிரடி..!!

புற நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மருந்து இல்லை என சீட்டு எழுதி கொடுக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முழுமையாக மருந்துகள் இலவசமாக வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் காப்பீடுத் திட்டத்தில் புதுச்சேரியை சார்ந்த 150-க்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றுள்ளனர். ஜிப்மரில் 50 கோடியில் புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளது” என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

Chella

Next Post

இரும்பு பீரோ மின்கம்பியில் உரசி 3 பேர் பலி …

Thu Sep 22 , 2022
தருமபுரி மாவட்டத்தில் வீடு காலி செய்தபோது இரும்பு பீரோ மின்கம்பியில் உரசியதில் 3 பேர் பலிதாபமாக உயிரிழந்தனர். தருமபுரி அருகே சந்தேப்பேட்டையைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் 2வது மாடியில் குடியிருந்தவர்கள் இலியாஸ் பாஷா மற்றும் குடும்பத்தினர். 9 ஆண்டுகளாக வசித்துவந்த நிலையில் வேறொரு வீட்டிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்தார். இவரது 2 மகன்களும் வெளியூரில் வேலைபார்த்து வருகின்றனர். வாடகை வீட்டில் இருந்து உடமைகளை எடுத்துக்கொண்டு புதிய […]

You May Like