fbpx

’இளைஞர்களே உங்களுக்கு வேலை இல்லையா’..? ரூ.11,000 ஊக்கத்தொகை வழங்கும் தமிழ்நாடு அரசு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவித்தபடி இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, இளைஞர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்கப்படும் அல்லது தொழில் முனைவோராக உருவாக்கப்படுவார்கள்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் (YOUNG WEAVERS INDUCTION AND ENTREPRENEURSHIP PROGRAMME FOR YOUNGSTERS) ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு 04.08.2023-ல் ஆணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்குதல் (அல்லது) தொழில் முனைவோர்களாக உருவாக்குதல், பாரம்பரியமான கைத்தறி தொழிலை அதனுடைய பழமை மாறாமல் புத்துயிரூட்டுவது ஆகும்.

கிராமப்புற இளைஞர்களும் கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக அவர்கள் பகுதியிலேயே ஆரம்பித்தல், வேலையில்லாத இளைஞர்களுக்கு நெசவுத் தொழில் தொடர்பாக குறுகியகால பயிற்சி அளித்தல், 2023-24இல் முதற்கட்டமாக 300 இளைஞர்களை இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்தல். கைத்தறி நெசவில் உள்ள தொழில்நுட்பங்களை பயிற்சியின் மூலம் கற்பித்தல் ஆகும்.

இந்த பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் பயிற்சி காலம் முடிய ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும். எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பத்தை வரும் செப்.20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.loomworld.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தவறான நபருக்கு பணம் அனுப்பிவிட்டீர்களா..? கவலைப்படாதீங்க..!! உடனே இதை பண்ணுங்க..!! பணம் திரும்ப வந்துரும்..!!

Thu Sep 14 , 2023
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எங்கு சென்றாலும் கேஷ் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தை இந்த ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் முறை போக்கிவிட்டது. ஆனால், பல நேரங்களில் நாம் UPI மூலமாக பணம் அனுப்பும்போது தவறான யூசரின் ID-க்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்திருப்போம். அவ்வாறு செய்துவிட்டால் பணத்தை தவறாக அனுப்பி விட்டோமே என்று நினைத்து வருந்த வேண்டிய அவசியம் இல்லை. தவறான அக்கவுண்ட்டிற்கு நீங்கள் அனுப்பிய […]

You May Like