fbpx

ரூ.6,000 பெற உங்களிடம் ரேஷன் கார்டு இல்லையா..? கவலை வேண்டாம்..!! இந்த ஆதாரம் இருக்கா..?

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அரசு பல்வேறு மீட்புப் பணிகளை மேற்கொண்ட நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் வழங்குவது குறித்தும் பெரிதாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதனைத் தொடர்ந்து 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த தொகை எந்தெந்த அடிப்படையில் யார் யாருக்கு வழங்கப்படும் என மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அந்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் தற்போது அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு நிவாரண தொகை வழங்கப்படும்.

அதை தொடர்ந்து ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போருக்கு நிவாரண தொகை வழங்கப்படும். மேலும், சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்போர் வாடகை ஒப்பந்தம், கேஸ் பில் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பித்து நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பாலஸ்தீனர்களை நிர்வாணமாக அழைத்து செல்லும் இஸ்ரேலிய படை!… அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்த பிரதமர் ஆலோசகர்!

Tue Dec 12 , 2023
காசாவில் சாலையோரத்தில் பாலஸ்தீன ஆண்களையும் குழந்தைகளையும் அரை நிர்வாணமாக உட்கார வைக்கும் காட்சிகளை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. கைகளை பின்பக்கம் கட்டி திறந்தவெளி ஒன்றுக்கு வாகனத்தில் அழைத்து செல்லும் காட்சி சமுக ஊடகங்களில் வெளியாகி பலரது சீற்றத்திற்கும் கண்டனத்திற்கும் ஆளானது. இந்தநிலையில், பிரித்தானியாவின் ஸ்கை நியூஸ் உடனான நேர்காணலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆலோசகரான மார்க் ரெகெவ், பாலஸ்தீன மக்களின் ஆடைகளை களைவது மற்றும் அவர்களின் கண்களை கட்டுவது குறித்த […]

You May Like