fbpx

ஏடிஎம்மில் உங்களுக்கு பணம் எடுக்க தெரியாதா..? வங்கிக் கணக்கில் இருந்து பணம் மாயமாகும் அபாயம்..!! உஷாரா இருங்க..!!

திண்டிவனத்தில் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.48,000 ரொக்கம் மற்றும் 81 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், வெள்ளிமேடு பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களை குறிவைத்து, ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தெரியாத நபர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி, வேறு ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் ஒரு கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது. இதுகுறித்து, காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் உத்தரவின் பேரில், திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில், தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயப்பன் தலைமையிலான ஜனார்த்தனன், தீபன்குமார், பூபால் செந்தில், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார், கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று தனிப்படை போலீசார், திண்டிவனம் வந்தவாசி சாலை வெள்ளிமேடு பேட்டை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நடந்து வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களை சோதனை செய்தனர். சோதனையின் போது பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் ஆபேல் (32), வேலூர் மாவட்டம் கோணவட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஜாபுதீன் மகன் முதர்ஷீர் (38), என்பதும், இவர்கள் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து ரூ.48,000 ரொக்கம் மற்றும் 81 ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

குழந்தைகள் கண் முன்னே ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்ட தாய்…..!மம்மி மம்மி என்று கதறிய குழந்தைகள் மனதை பதற வைக்கும் வீடியோ…..!

Mon Jul 17 , 2023
வாரத்தின் 6 நாட்கள் எதைப்பற்றியும் கவலை இல்லாமல், எந்தவித சிந்தனையும் இல்லாமல் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் வார இறுதியில் குடும்பத்துடன் வெளியே சென்று குதூகலமாக இருப்பதை தற்போது வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அனைவரின் வாழ்விலும் இந்த வார இறுதி நாள் மகிழ்ச்சியை பதிவு செய்யும் என்று நினைத்த நிலையில், இந்த வார இறுதி நாள் ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு மாறாத சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மகாராஷ்டிரா […]

You May Like