பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதாக பிரமோத் பகத்துக்கு 18 மாதங்கள் தடை விதித்து சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால், விரைவில் தொடங்கவுள்ள உள்ள பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் அவர் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றார். கடந்த 12 மாதங்களில் 3 முறை ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் அவர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ஆம் தேதி ஊக்க மருந்து தடுப்பு சோதனையை எதிர்த்து பிரமோத் பகத் தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், அவர் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள 18 மாதங்கள் தடை விதித்து சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதனால், அவர் பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.
Read More : BREAKING | கூல்டிரிங்ஸ் குடித்து சிறுமி உயிரிழந்த விவகாரம்..!! தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவு..!!