Jannik sinner: தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக, உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் சின்னருக்கு மூன்று மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியை சேர்ந்த உலகின் நெ.,1 டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர். மொனாக்கோ நாட்டில் வசிக்கிறார். இதுவரை ஏ.டி.பி., சுற்றில் 19 ஒற்றையர் டென்னிஸ் பட்டங்களை வென்றவர். 2024ம் ஆண்டில் ஆஸ்திரேலியன் ஓப்பன், யு.எஸ்., ஓபன், 2025ல் ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியன் பட்டங்களை வென்றவர். இவர், கடந்தாண்டில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தினார் என சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு வழக்கு தொடர்ந்தது. கடந்தாண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில், சின்னரை விடுவித்து தீர்ப்பாயம் தீர்ப்பு கூறியிருந்தது.
ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு, மேல் முறையீடு செய்தது. இதன் மீதான விசாரணை, ஏப்ரல் மாதம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சின்னருக்கும், ஊக்க மருந்து தடுப்பு அமைப்புக்கும் இடையே பேச்சு நடத்தி உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, 3 மாத காலம் டென்னிஸ் விளையாட விதிக்கப்பட்ட தடையை சின்னர் ஏற்றுக்கொண்டார். அந்த தடை ஏப்ரல் மாதம் 13 வரை அமலில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. உதவியாளர் மசாஜ் செய்தபோது க்ளஸ்டோபால் என்ற ஊக்க மருந்து அவரது ரத்தத்தில் கலந்து விட்டதாக சின்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்!. 2வது கட்டமாக 116 பயணிகள் இந்தியா வந்தனர்!.