fbpx

தோழி காதலிப்பது பிடிக்கவில்லை..!! போனில் வெடித்த சண்டை..!! 70 அடி பள்ளத்தில் விழுந்து பிளஸ் 2 மாணவி தற்கொலை..!!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள குற்றியாறு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி தவமணி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில், இளைய மகள் அபிநயா பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்றைய தினம் அபிநயாவும், ஒரு இளம்பெண்ணும் மாத்தூர் தொட்டிப்பாலத்துக்கு சென்றனர்.

அங்கு இருவரும் பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். இளம்பெண் முன்னே செல்ல அபிநயா செல்போனில் யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டே சென்றார். சிறிது தூரம் சென்றதும் அபிநயா செல்போனில் பேசிய படி எதிர்முனையில் பேசியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், பாலத்தில் கைப்பிடி சுவரில் ஏறி கீழே குதித்தார். இதில் அவர் சுமார் 70 அடி பள்ளத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்தார்.

இதைத்தொடர்ந்து, அவரை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் விரைந்து சென்று அபிநயா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதாவது அபிநயாவும், 17 வயதுடைய ஒரு சிறுமியும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ளனர். அந்த பெண்ணின் பெயரைத்தான் அபிநயா தனது கையில் பச்சை குத்தியுள்ளார்.

இந்நிலையில், அந்த பெண் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதனால், அவர் அபிநயாவை விட்டு விலக தொடங்கியுள்ளார். இது அபிநயாவுக்கு பிடிக்கவில்லை. அவருடன் செல்போனில் வாக்குவாதம் செய்த நிலையில், தொட்டிப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. மேலும், தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ”மதுவிலக்கு பற்றி பேசுவதால் திமுக கூட்டணியில் விரிசல் வந்தாலும் பரவாயில்லை”..!! திருமாவளவன் பரபரப்பு பேச்சு..!!

English Summary

The incident of Plus 2 student committing suicide over a love affair has caused shock.

Chella

Next Post

நாளை பொது விடுமுறை..!! இதெல்லாம் இயங்காது..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Mon Sep 16 , 2024
The Tamil Nadu government has announced that tomorrow will be a public holiday in honor of Prophet Milady.

You May Like