fbpx

வரதட்சணை கொடுமை!… 4 குழந்தைகளை இரும்பு டிரம்மில் பூட்டி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக 4 குழந்தைகளை இரும்பு டிரம்மில் வைத்து பூட்டி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தின் மாண்ட்லி ஸ்டேஷன் பகுதியை சேர்ந்தவர் ஊர்மிளா. இவரது கணவர் ஜெதா ராம் சுரங்கத் தொழிலாளி ஆவர். இவர்களுக்கு விக்ரம் (5), பாவனா (8), மனிஷா (2), விம்லா(3) ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், சம்பவதன்று கணவர் ஜெதா ராம் வேலைக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில், மாலையில் ஊர்மிளா மற்றும் அவரது குழந்தைகள் இல்லாததைக் கண்ட உறவினர்கள், வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, ​​பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துகிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், குழந்தைகளை அந்த பெண் இரும்பு டிரம்மில் பூட்டியதாகவும் இதனால் குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளனர்.

கடந்த ஐந்து வருடங்களாக ஊர்மிளாவை அவரது கணவர் ஜெதா ராம் மற்றும் அவரது மாமியார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 5 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கல்யாண்பூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வட்ட நிலைய அதிகாரி கமலேஷ் கெலாட் கூறுகையில், கணவர் மீது கொலை மற்றும் வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kokila

Next Post

புயல் எச்சரிக்கை!... அரபிக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!... வானிலை மையம் அலர்ட்!

Mon Jun 5 , 2023
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஜூன் 7-ம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முதல் ஜூன் 7ம் தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு சூறாவளி சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் […]

You May Like