fbpx

Doctor | நோயாளிகளே நோட் பண்ணிக்கோங்க..!! இனி மருத்துவர்கள் இப்படி செய்தால்..!! அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் மருத்துவர்கள் அனைவரும் புரியும்படி பெரிய எழுத்துகள் அதாவது, CAPTAL எழுத்துகளில் தான் மருந்துகள் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக உடல் நிலை சரியில்லை என்று மருத்துவரிம் போனால் அவர்கள் நம்மைப் பரிசோதனை செய்துவிட்டு மருந்துகளை எழுதித் தருவார்கள். ஆனால், பெரும்பாலான நேரம் அவர்கள் எழுதித் தரும் மருந்துகளைப் பார்த்தாலே நமக்குத் தலைச் சுற்றிவிடும். அந்தளவுக்குத் தான் மருத்துவரின் கையெழுத்து இருக்கும். பெரும்பாலான மருத்துவர்கள் மருந்து பரிந்துரை சீட்டுகளில் இப்படித்தான் எழுதித் தருவார்கள். மருத்துவர்கள் ஏன் இதுபோல எழுதித் தருகிறார்கள் என்பது நமக்கும் தெரியாது.

அவர்கள் என்ன எழுதித் தருகிறார்கள் என்பது புரியாமல் தான் நாமும் மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம். மருந்தகங்களில் இருக்கும் நபர்களே கூட என்ன எழுதித் தருகிறார்கள் என்று புரியாமல் குழம்பும் நிகழ்வுகளும் கூட நடந்துள்ளன. உடலுக்கு ரொம்பவே சீரிஸயாக முடியாமல் இருக்கும் போது இதுபோல புரியாத வார்த்தைகளில் இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். இத்தனையும் மருந்து சீட்டுக்களில் தெளிவாக எழுதிக் கொடுக்க வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ரூல்ஸ் இருக்கிறது.

அதாவது தங்களுக்கு என்ன மருந்துகள் வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் தான் டாக்டர்கள் மருந்துகளை எழுதித் தர வேண்டும். ஆனால், பெரும்பாலான மருத்துவர்கள் இதைக் கண்டுகொள்வதில்லை. மெடிக்கல்கள் ஊழியர்கள் மட்டும் தான் டாக்டர்கள் எழுதித் தருவது புரிகிறது. முன்பே கூறியது போல சில சமயம் அவர்களும் கூட புரிவதில்லை. இது தொடர்பாக மருத்துவத்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளில் மருந்துகளை எழுதித் தரும் போது ஆங்கிலத்தில் CAPTAL எழுத்துகளில் தான் எழுதித் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

நோயாளிகளுக்குப் புரியும் வகையில் தான் மருந்துகள் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ள நிலையில், இப்போது தமிழ்நாடு அரசும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் என அனைத்து மருத்துவர்களும் மருந்து சீட்டுகளில் CAPTAL லெட்டரில் தான் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Read More : #BREAKING | நாம் தமிழர் கட்சி சீமானின் மனைவிக்கு புதிய பொறுப்பு..!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Chella

Next Post

Mud bath : ஆயுர்வேதத்தின் முதன்மை சிகிச்சையான மண் குளியல்.? என்னென்ன நன்மைகள் உள்ளன தெரியுமா.!?

Thu Feb 22 , 2024
பொதுவாக நாம் சிறுவயதில் மண்ணில் நன்றாக விளையாடிய காலத்தில் கூட நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது மண் என்றாலே அழுக்கு, தொடுவதற்கே பயம் என்று அருவருப்படையும் குழந்தைகள் பலர் இருந்து வருகின்றனர். அதையும் மீறி மண்ணில் விளையாடும் ஒரு சில குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டின் காரணமாக உடலில் நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் மண்ணில் விளையாடவே குழந்தைகளும், பெற்றோர்களும் பயப்படுகின்றனர். ஆனால் இந்த மண்ணை […]

You May Like