fbpx

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு..!! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேர்தல் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளிக்கலாம்.

இந்த விண்ணப்ப படிவங்களை டிசம்பர் 9ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இந்நிலையில் நவம்பர் 4, 5 மற்றும் 18 , 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் ஆகிய படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த படிவங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இதில், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ரூ.62,000 வரை சம்பளம்..!! 2,250 காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க அக்.31ஆம் தேதியே கடைசி..!!

Thu Oct 26 , 2023
தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலை பணிகளில் காலியாக உள்ள 2,250 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மொத்த காலிப்பணியிடங்கள் : 2,250 கல்வி தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பொது சுகாதாரம் மற்றும் நோய் […]

You May Like