fbpx

அக்னிபாத் திட்டத்தில் அதிரடி மாற்றம்..!! இந்திய விமானப்படை தளபதி புதிய அறிவிப்பு..!!

இந்திய விமானப்படையின் அக்னிபாத் திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் மகளிர் சேர்க்கப்பட உள்ளதாக விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்திரி அறிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை தினம், விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்திரி தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. சண்டிகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய விமானப் படைத் தளபதி, ’இந்திய விமானப்படை அதிகாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆயுதப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இப்போது தான் இந்த பிரிவு தொடங்கப்படுகிறது. மத்திய அரசு இப்போது தான் இதற்கு அனுமதியும் அளித்துள்ளது. இந்த பிரிவு அனைத்து வகையான நவீன ஆயுதங்களைக் கையாளும். அதன் மூலம் 3,400 கோடி ரூபாய் மிச்சமாகும்.

அக்னிபாத் திட்டத்தில் அதிரடி மாற்றம்..!! இந்திய விமானப்படை தளபதி புதிய அறிவிப்பு..!!

அக்னிபாத் திட்டத்திற்காகவே பயிற்சி முறைகளை விமானப்படையில் மாற்றி அமைத்துள்ளோம். வீரர்களுக்கு உரிய பயிற்சியும், திறனும், அறிவும் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ், பயிற்சிக்காக 3 ஆயிரம் வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர். வருங்காலங்களில் விமானப்படையில் அக்னி வீரர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். அக்னிபாத் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு முதல் மகளிரும் விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளனர்.

அக்னிபாத் திட்டத்தில் அதிரடி மாற்றம்..!! இந்திய விமானப்படை தளபதி புதிய அறிவிப்பு..!!

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் முதலில் பரவலாக எதிர்ப்பு எழுந்தாலும், எதிர்க்கட்சிகளும் திட்டத்தில் சில குறைகள் இருப்பதாக கூறினாலும், அத்திட்டத்தில் சேருவதற்கு லட்சக்கணக்கில் இளைஞர்கள் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! அகவிலைப்படி அதிரடி உயர்வு..!!

Sat Oct 8 , 2022
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், இந்த அகவிலைப்படி உயர்வு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, […]

You May Like