fbpx

பாராசிட்டமால் உள்ளிட்ட 127 மருந்துகளின் விலையில் அதிரடி மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தேசிய மருந்துகள் விலைக் கொள்கையால் பாராசிட்டமால் உள்ளிட்ட 127 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைக்கப்பட்ட 127 மருந்துகளில் பாராசிட்டமால், அமோக்ஸிலின் உள்பட பல மருந்துகள், நோயாளிகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் மருந்துகளாக இருப்பதால், மக்களுக்கு பெரிய அளவில் இந்த விலைக்குறைப்பு பயனளிக்கும் என்று கருதப்படுகிறது.

ஒரு பாராசிட்டமால் (650 எம்ஜி) மாத்திரை தற்போது ரூ.2.3 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் போது ஒரு மாத்திரை விலை ரூ.1.8 காசுகளாக இருக்கும். இதுபோல, தொற்றுநோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளின் விலையும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 2ஆம் வகை நீரிழிவுக்கு கொடுக்கப்படும் மெட்ஃபார்மின் (500 எம்ஜி) மாத்திரை விலை ஒன்று ரூ.1.7 காசுகளாக இருந்த நிலையில், ரூ.1.8 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மெட்ஃபார்மின் கூட்டு கலவையான மாத்திரைகளின் விலை கடந்த ஓராண்டில் மட்டும் பலமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பாராசிட்டமால் உள்ளிட்ட 127 மருந்துகளின் விலையில் அதிரடி மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பாராசிட்டமால் உள்ளிட்ட மாத்திரைகளின் விலை குறைந்திருப்பது ஒரு பக்கம் வரவேற்கப்பட்டாலும், ஏராளமான முதியவர்கள் பயன்படுத்தும் நீரிழிவுக்கான மாத்திரை உள்ளிட்ட சில மாத்திரைகளின் விலைகள் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

Chella

Next Post

ஆசிரியர் தகுதித் தேர்வு..!! சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி..? தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

Fri Dec 23 , 2022
சான்றிதழ் பதிவிறக்கம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 1.53 லட்சம் பேர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து […]
ஆசிரியர் தகுதித் தேர்வு..!! ஹால் டிக்கெட் வெளியீடு..!! எப்படி பதிவிறக்கம் செய்வது..? முழு விவரம் உள்ளே..!!

You May Like