fbpx

74 மருந்துகளுக்கான விலையில் அதிரடி மாற்றம்..!! வெளியான புதிய பட்டியல்..!!

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட 74 மருந்துகளுக்கான சில்லரை விற்பனை விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. 

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் 109-வது கூட்டம் நடைபெற்றது. இதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட 74 மருந்துகளுக்கான விலையை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மருந்துகளின் விலை கட்டுப்பாட்டு ஆணை 2013 இன் கீழ், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், 74 மருந்துகளின் விலைகளை மாற்றி அமைத்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, Dapagliflozin Sitagliptin மற்றும் Metformin Hydrochloride மாத்திரையின் விலை ரூ.27.75 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உயர் இரத்த அழுத்தம், இதய செயலிழப்பு மற்றும் நீரிழிவு சிறுநீரக நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் டெல்மிசார்டன் (telmisartan ) மற்றும் இதய நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் பிசோப்ரோலால் ஃபுமரேட்(bisoprolol fumarate) மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒரு மாத்திரையின் விலை ரூ.10.92 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கால்-கை வலிப்பு மற்றும் நியூட்ரோபீனியா நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சோடியம் வால்ப்ரோயேட்டின் (20mg) விலையையும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு மாத்திரையின் விலை ரூ.3.20 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, ஃபில்கிராஸ்டிம் ஊசியின் (ஒரு குப்பி) விலை ரூ.1,034.51 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஹைட்ரோகார்டிசோன் என்ற ஸ்டீராய்டு மாத்திரையின் விலை ரூ.13.28 ஆக மாற்றப்பட்டுள்ளது.

Chella

Next Post

'ட்விட்டரில்' வைரலாகும் சினிமா தாத்தாவின் டேட்டா டைரிக் குறிப்பு!

Tue Feb 28 , 2023
தமிழகத்தைச் சார்ந்த அக்ஷய் என்ற இளைஞர் தனது தாத்தாவை பற்றி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி சினிமா ரசிகர்களிடமும் ட்விட்டர் பயனாளர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. தமிழகத்தைச் சார்ந்த சினிமா ரசிகரான இவர் ட்விட்டரில் சினிமா பற்றிய செய்திகளை பகிர்ந்து வந்திருக்கிறார் இந்நிலையில் தனது தாத்தாவின் டைரியில் இருந்த சில பக்கங்களை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவேற்றி இருக்கிறார் இந்த இளைஞர். இந்த புகைப்படங்கள் தற்போது ட்விட்டரில் வைரலாகி […]

You May Like