fbpx

ரயில் டிக்கெட் எடுப்பதில் அதிரடி மாற்றம்..!! அந்த 2 மணிநேரம் ரொம்ப முக்கியம்..!! பயணிகள் மகிழ்ச்சி..!!

நாட்டில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். டிக்கெட் முன்பதிவு செய்தால், செல்ல வேண்டிய இடத்திற்கு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் பயணிக்க முடியும். இதனால், ரயில் பயணத்தின் மீதான மவுசு குறையவில்லை. இந்நிலையில், கடந்த 2015 ஏப்ரல் மாதம் கவுன்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

இதனால் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், மின்சார ரயில்களுக்கான டிக்கெட் ஆகியவற்றை பெறும் வசதி உள்ளது. இருப்பினும், ஜியோ பென்சிங் என்ற கட்டுப்பாடுகள் இருந்ததால் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே இருந்து டிக்கெட்களை பதிவு செய்ய முடியாத நிலை உருவானது. இந்நிலையில், ஜியோ பென்சிங்கின் வெளிப்புற எல்லையை ரயில்வே நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது.

இதனால், யூடிஎஸ் செயலி மூலம் ரயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், டிக்கெட் எடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்துவிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Read More : தொடங்கியது மே மாதம்..!! வங்கி விடுமுறையை நோட் பண்ணுங்க..!! இத்தனை நாட்கள் இயங்காதா..?

Chella

Next Post

Ajith Kumar : நடிகர் அஜித்தை பற்றி பெரும்பாலானோர் அறியாத விஷயங்கள்..!

Wed May 1 , 2024
Ajith Kumar : தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழக்கூடிய ‘தல’ என ரசிகர்கள் அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித்குமாரின் பிறந்த தினம் இன்று. அவர் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திரையுலகினர், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் அஜித்தை பற்றி… 1) 1971ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி ஆந்திராவில் பிறந்தார் நடிகர் அஜித். இவரது தந்தை […]

You May Like