பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இது அவர்களுக்கு ஒரு சிறப்பான செய்தியாக இருக்கும். 6.5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இபிஎஃப்ஓ மூலம் பயனடையப் போகிறார்கள். இபிஎஃப்ஓ, ஓய்வூதிய நிதியில் உச்சவரம்பு தொடர்பான முடிவை மிக விரைவில் எடுக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
PF இன் வரம்பிற்குள் அதிகமான மக்களைக் கொண்டுவர அரசாங்கம் விரும்புவதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. இந்த திசையில், ஓய்வூதிய வரம்பை அடிப்படை சம்பளமான ரூ.15,000இல் இருந்து ரூ.21,000 ஆக உயர்த்த ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இபிஎஃப்ஓ விதிகளின்படி, இபிஎஸ் ஓய்வூதியத்தில், அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.15,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில், EPFO ஓய்வூதிய நிதியில் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 1,250 ரூபாய் டெபாசிட் செய்யலாம். இதில் மாற்றங்கள் செய்யப்பட்டால், இந்த வரம்பு ரூ.21,000 ஆக உயரும்.
இபிஎஃப்ஓ சந்தாதாரர் EPS க்கு பங்களிக்கும் போது, அவரது EPF தவிர மற்றொரு தொகை EPFO-க்கு செல்கிறது. ஆனால், இதில் டெபாசிட் மற்றும் ஓய்வூதிய நிதியின் அதிகபட்ச வரம்பு ரூ.15,000 ஆகும். இப்போது அதை இபிஎஃப்ஓ அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் கூறுகின்றன. ஒரு உதாரணம் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். இபிஎஃப்ஓ-வில் பங்களிக்கும் ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 30,000 என வைத்துக் கொள்வோம். அந்த சம்பளத்தில், 12% EPS டெபாசிட் செய்யப்படுகிறது.
இதுமட்டுமின்றி, அதே பங்கு முதலாளியின் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால், முதலாளியின் பங்கு EPFO இல் இரண்டு இடங்களில் டெபாசிட் செய்யப்படுகிறது. முதலாவது EPF இல் டெபாசிட் செய்யப்படுகிறது. இரண்டாவது EPS இல் டெபாசிட் செய்யப்படுகிறது.
இபிஎஃப்ஓ என்றால் என்ன?
ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். இந்தியாவில் ஓய்வூதியத்திற்காக சேமிப்பதில் முக்கிய வழிகளில் ஒன்று “பணியாளர் வருங்கால வைப்பு நிதி’ (EPF) ஆகும். அரசாங்கச் சேமிப்புத் திட்டமான இது, ஊழியர்கள் தங்கள் பணி ஆண்டுகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தவும், வசதியான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் உதவும்.