கடந்த சில மாதங்களாக தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. விலை கடுமையாக உயர்ந்ததால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பலர் கோடீஸ்வரர்களாக மாறினர். மறுபுறம், பல விவசாயிகள் தக்காளியை பத்திரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, சில இடங்களில் தக்காளி திருட்டு சம்பவங்களும் அரங்கேறின. தக்காளி விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது தக்காளியின் விலை சில இடங்களில் இரட்டை சதத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் மார்க்கெட்டில், காய்கறிகள், தக்காளி, உருளைக்கிழங்கு, பூண்டு, வெங்காயம் மற்றும் பிற பயிர்கள் பெரும் வருமானத்தை ஈட்டி வருகின்றன. தற்போது விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜ்கோட் மார்க்கெட் யார்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.34-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.6 குறைந்து ரூ.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு குவிண்டாலுக்கு ரூ.600 குறைந்துள்ளது.
இன்று ராஜ்கோட் மார்க்கெட் யார்டுக்கு 998 குவிண்டால் தக்காளி வந்துள்ளது. விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதால், ராஜ்கோட் மார்க்கெட் யார்டுக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். மார்க்கெட் யார்டுக்கு வெளியே காலை முதலே ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விவசாயிகள் தங்கள் பயிர்களை விற்க தொலைதூர இடங்களில் இருந்து இங்கு வருகிறார்கள்.