சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சரத்குமார், “நடிகர் அஜித் குமார் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். பைக்கில் டூர் போவதை பற்றி வீடியோவில் கூறியிருந்தார். சம்பந்தமே இல்லாத ஒரு மனிதனுக்கு கோபம் வருகிறது என்றால் அதற்கு காரணம் மதம் தான். ஏதோ ஒரு நாட்டுக்கு போகும் போது ஒருவரை பார்க்கிறோம். எந்த சண்டையும் கிடையாது. ஆனால், அந்த மதம் தான் தேவையில்லாமல் ஒரு வெறுப்பை உருவாக்குகிறது என்று அஜித் கூறியிருந்தார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
ஆரியம் திராவிடத்தை எதிர்ப்பது ஓகே. தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது ஆபத்தானது. ஆரியம் திராவிடத்தை எதிர்க்கலாம். தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார் இதை பற்றி. அவரிடம் நான் பேசுவது எல்லாம் சரியா என்று கேட்டால், நீ பேசுவதை பார்த்து அவர்கள் கோபப்பட்டால், நீ பேசுவது சரி என்றார். ஆனால், அவர்கள் சந்தோஷப்பட்டால் நீ தப்பா பேசுகிறாய் என்று அர்த்தம் என்று சொல்லிக் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்.
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என பிரபாகரனே சொல்லியிருக்கிறார். ஒருமுறை பேரறிவாளன் ஜாமீனில் வெளியில் வந்திருந்தார். அவரை பார்க்க வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் வீட்டுக் கதவை திறந்த உடன் அங்கு சுவரில் பெரியார், பிரபாகரன் படம் இருந்தது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை” என்று பேசினார்.
விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் திராவிடம், தமிழ்தேசியம் இரண்டும் இரு கண்கள். இது எங்கள் கொள்கை என அறிவித்தார். தமிழ்தேசியம், திராவிடம் என்பது எப்படி ஒன்றாகும் என சீமான் உள்ளிட்டோர் விமர்சித்தனர். இந்நிலையில் திராவிடமும், தமிழ்தேசியம் இரண்டும் ஒன்றுதான். இரண்டையும் வெவ்வேறாக பிரித்து பார்ப்பது சரியாகாது என பிரபாகரன் கூறியதை மேற்கோள் காட்டி விஜய்யின் கொள்கையை தவறு என்ற வகையில் சத்யராஜ் முறைமுகமாக விமர்சித்ததாக பார்க்கப்படுகிறது.