fbpx

“நமது குழந்தைகள் மற்றும் வம்சாவளிகள் இந்துக்களாக இருக்கும் வரை ராமர் கோவில் அழியாது”..! சுவாமி விஸ்வப் பிரசன்னா தீர்த்தா..

உத்திரபிரதேச மாநிலத்தின் புனித நகர்களில் ஒன்றான அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழா வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்தக் கோவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் திறக்கப்பட உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் அயோத்தி நகரில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

  3 அடுக்குகள் மற்றும் 42 நுழைவு வாயில்களுடன் கட்டப்பட்டிருக்கும் ராம் மந்திர் ஆலய திறப்பு விழாவிற்கு அரசியல் பிரமுகர்கள் சினிமா நட்சத்திரங்கள் தொழிலதிபர்கள் சுவாமியார்கள் மடாதிபதிகள் என பல்லாயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் சடங்குகளும் இந்திய நேரப்படி  நண்பகல் 12:20 மணிக்கு நடைபெற இருக்கிறது.

அரசியல் பிரமுகர்கள் மற்றும் விஐபிகள் தவிர நாடெங்கிலும் உள்ள ஸ்ரீ ராமரின் சிறப்பு பக்தர்களும் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராமஜென்ம பூமி அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவரான சுவாமி விஸ்வபிரசன்னா தீர்த்தா ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக நிகழ்வு பற்றி பேட்டி அளித்திருக்கிறார். இது தொடர்பாக பேசி இருக்கும் அவர் நமது குழந்தைகள் மற்றும் வம்சாவளிகள் இந்துக்களாக இருக்கும் வரை ராமர் கோவில் அழியாமல் இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை ராமர் கோவிலின் புகழ் ஓங்கி ஒலிக்கும். மேலும் ஒவ்வொருவரும் நமது கலாச்சாரம் மற்றும் மரபுளை பாதுகாக்க வேண்டும். குழந்தைகளுக்கு வேதங்கள் மற்றும் புராணங்களின் அடிப்படையில் பெயர்களை வைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். பல நூற்றாண்டுகளின் கனவு ராமர் கோவில் கட்டப்பட்டிருப்பதன் மூலம் நடந்திருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார். கோவில் வரலாற்றுச் சின்னம் போன்று பார்க்காமல் அதற்குரிய சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகளை இடைவிடாது நடத்தி வரவேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Next Post

இது மோடியின் கனவு!… நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்!… வீடு கட்டித்தரப்படும்!… பாஜக அமைச்சரின் பேச்சால் சிரிப்பலை!

Thu Jan 11 , 2024
நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். பிரதமர் மோடி உங்களுக்கு வீடுகளை கட்டித் தருவார் என ராஜஸ்தான் மாநில அமைச்சர் பாபுலால் கராடி பேசியிருப்பது சிரிப்பலையை ஏற்படுத்தியது. கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தது. அதன்படி, மாநில முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றுள்ளார். இந்தநிலையில், வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான லட்சிய யாத்திரை நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் உதய்ப்பூரில் நடந்தது. இதில், முதல்வர் பஜன்லால் சர்மா, பழங்குடியின வளர்ச்சித்துறை […]

You May Like