fbpx

உடல் எடை குறைய! அதிகரிக்க வேண்டுமா?… இரண்டிற்கும் ஒரே தீர்வு!… இந்த பழ ஷேக் குடியுங்கள்!

உடல் எடை இழப்பு மற்றும் அதிகரிப்பு இரண்டுக்கும் உதவும் வகையில் வாழைப்பழம் பேரீட்சைப்பழத்தை வைத்து மில்க் ஷேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.

நம்மில் பலர் உடல் எடையை குறைக்க முயற்சிப்போம். இன்னும் சிலர், உடல் எடையை அதிகரிக்க முயற்சிப்போம். வாழைப்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் பானம் இந்த இரண்டு பிரச்சினைக்கும் உதவும். தேவையான பொருட்கள் : வாழைப்பழம் – 3, பேரீட்சைப்பழம் – 10, பாதாம் – 5 பருப்பு, முழு கொழுப்புள்ள பால் – 1/2 லிட்டர், சர்க்கரை – 2 ஸ்பூன், வெண்ணிலா எசென்ஸ் – 1/4 தேக்கரண்டி (தேவைப்பட்டால்), ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு.

செய்முறை : வாழைப்பழம் பேரீட்சைப்பழ மில்க் ஷேக் செய்ய, முதல் நாள் இரவே பாதாமை தண்ணீரில் ஊறவைத்து எடுத்து கொள்ள வேண்டும். முதல், வாழைப்பழத்தை தோல் நிக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். இதையடுத்து, எடுத்து வைத்துள்ள பேரிச்சம் பழத்தை விதை நிக்கி எடுத்துக்கொள்ளவும். ஊறவைத்த பாதாமை தோல் நிக்கி எடுத்துக்கொள்ளவும். இதை தொடர்ந்து, மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், பேரிச்சம் பழம், பாதாம், சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், ஐஸ் கட்டி, காய்ச்சிய பால் சேர்த்து நன்கு அரைத்து எடுத்தால் வாழைப்பழம் பேரீட்சைப்பழ மில்க் ஷேக் ரெடி.

Kokila

Next Post

இனி ஏரியா சபை கூட்டங்கள்‌ மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும்...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Thu May 25 , 2023
ஏரியா சபைக்‌ கூட்டங்கள்‌ மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது,வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும்‌. தமிழகம் முழுவதும் 180வது விதியின்படி, ஏரியா சபைக்‌ கூட்டங்கள்‌ மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது,வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும்‌. மாநகராட்சிகள்‌, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ ஏற்படுத்தப்பட்டுள்ள ஏரியா சபைகளின்‌ கூட்டங்களை, ஆண்டு தோறும்‌, தேசிய வாக்காளர்‌ தினமான ஜனவரி 25-ம்‌ தேதி டாக்டர்‌ அம்பேத்கர்‌ அவர்களின்‌ பிறந்த தினமான ஏப்ரல்‌ […]

You May Like