fbpx

சீனாவின் OPPO நிறுவனம் ரூ.4,389 கோடி சுங்க வரி ஏய்ப்பு…! மத்திய வருவாய் புலனாய்வு அதிரடி ஆய்வு…!

சீனாவின் “குவாங்க்டங்க் ஓப்போ கைப்பேசி தொலைத்தொடர்பு கழக நிறுவன”த்தின் துணை நிறுவனமான OPPO இந்தியா, ரூ.4,389 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது.

இந்தியா முழுவதும் உற்பத்தி, வடிவமைத்தல், மொத்த வியாபாரம், கைப்பேசி மற்றும் உதிரிபாகங்கள் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஓப்போ இந்தியா ஈடுபட்டுள்ளது. ஒன்பிளஸ் மற்றும் ரியல்மீ உள்ளிட்ட பல்வேறு கைப்பேசி நிறுவனங்களுடன் ஓப்போ இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. OPPO இந்தியா அலுவலக வளாகம் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சோதனை நடத்தியது.

அப்போது, கைப்பேசி உற்பத்தி செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட சில பொருட்களின் விலையை OPPO இந்தியா நிறுவனம் தவறாக குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், OPPO இந்தியா, ரூ.2,981 கோடி அளவுக்கு வரி விலக்கு பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூத்த நிர்வாக பணியாளர்கள் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள், இறக்குமதியின்போது, சுங்க அதிகாரிகளிடம் தவறான தகவல்களை அளித்ததை ஒப்புக் கொண்டனர்.

Also Read: “சூப்பர் நியூஸ்” இனி தமிழக அரசு பேருந்தில் சுமை பெட்டி வாடகை திட்டம்‌…! போக்குவரத்து அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!

Vignesh

Next Post

1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.. ஆனால் அதிகமானோரை பணியமர்த்த திட்டம்..

Thu Jul 14 , 2022
மைக்ரோசாப்ட் நிறுவனம் பல்வேறு பிராந்தியங்களில் 1800 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஜூன் 30 -ம் தேதியுடன் அந்நிறுவனத்தின் நிதியாண்டு முடிவடைந்த நிலையில், நிறுவனத்தின் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக பணி நீக்க நடவடிக்கை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.. எனினும் நடப்பு நிதியாண்டில், அதிக எண்ணிக்கையில் புதிய ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.. எல்லா நிறுவனங்களையும் போலவே, நாங்கள் எங்கள் வணிக முன்னுரிமைகளை ஒரு வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்து, […]
அதிர்ச்சி..!! 11,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்..? காரணம் என்ன..?

You May Like