fbpx

இந்த ஜூஸை குடித்துவந்தால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படாது!… மருத்துவர்களின் அறிவுரை இதோ!

வைட்டமின் சி இருக்கக் கூடிய எலுமிச்சை, ஆரஞ்ச், சாத்துக்குடி ஜூஸை தினந்தோறும் குடித்துவந்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதை தடுக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சிறுநீரக கற்கள் எதனால் வருகிறது என்றால் கால்சியம், ஆக்ஸலேட் ஆகிய இரு உப்புகளும் ஒன்று சேரும் போது நமக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. இதை எப்படி தடுப்பது, அந்த கற்களை எப்படி கரைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்வோம். நிறைய தண்ணீரை குடிப்பதன் மூலமாக முதலில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம். ஒரு நாளைக்கு 3 முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். நீராகாரங்களாக நிறைய சேர்க்கும் போது சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாது.

மேலும், வைட்டமின் சி இருக்கக் கூடிய எலுமிச்சை, ஆரஞ்ச், சாத்துக்குடி ஆகியவற்றில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. இது, சிட்ரேட்டாக இருக்கும் போது கால்சியமும் ஆக்ஸலேட்டும் ஒன்று சேராமல் தடுப்பதற்கு இது உதவுகிறது. இதனால் கற்கள் ஏற்படாது. ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள் எலுமிச்சை ஜூலை ஒரு நாளைக்கு 3 முதல் 4 தடவை எடுத்து கொண்டே வந்தால் சிறுநீரக கற்கள் கரைத்துவிடும்.
ஆன்டி இன்ஃபிளமேட்டரி எஃபெக்ட் இருப்பதால் 10 முதல் 20 துளசி இலைகளை கொதிக்க வைத்து தேன் கலந்து குடிப்பது மிகவும் நல்லது. அடுத்தது மாதுளை பழத்தில் துவர்ப்பு சுவையுடன் கூடியதை ஜூஸ் செய்து குடித்தால் சிறுநீரக கற்கள் நீங்கும். இளநீர், தர்ப்பூசணி, மோர் உள்ளிட்ட நீராகாரங்கள் நிறைய எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Kokila

Next Post

சூடாக எதை அருந்தினாலும் கேன்சர் வரும்?... ஆய்வாளர்கள் ஷாக் ரிப்போர்ட்!

Wed Feb 22 , 2023
தொடர்ச்சியாக 60 டிகிரி செல்சியஸிற்கு மேலாக சூடான பானங்களை அருந்தினால் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிக சூடாக டீ, காஃபியை தொடர்ந்து குடித்தால் உடல் நலனில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியல் வெளியிட்டுள்ளது. சர்வதேச மெடிக்கல் ஜர்னலின் ஆய்வின் படி, எந்த ஒரு பானத்தையும் அதீத சூடாக அதாவது […]
திடீரென்று காஃபி குடிப்பதை நிறுத்தினால் என்ன நடக்கும்..? அதிக நன்மைகளும்.. சில தீமைகளும்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like