இந்தியாவின் முதல் முறையாக சாலை விதிகளை மீறுவோருக்கு தண்டனை வழங்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்தை குஜராத் மாநில அகமதாபாத் காவல்துறை செயல்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தினமும் ஏராளமானவர்கள் சாலை விதிமுறைகளை மீறி வருகின்றனர். அதில், ஒரு சாரார் இரு சாலைகள் இருந்தும் தவறான சாலைகளில் செல்வார்கள். அப்படி தவறாக செல்பவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில், முள் படுக்கை கொண்ட தடுப்பு பலகை போடப்பட்டுள்ளது. இது சரியான பாதையில் செல்பவருக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஆனால், தவறான பாதையில் செல்பவர்கள் டயர்களை இந்த முள் படுக்கை பஞ்சர் ஆக்கிவிடும். இதற்காக எச்சரிக்கை பலகையும் ஒட்டப்பட்டுள்ளது. அதையும் மீறி செல்லும் எந்த ஒரு வாகனமாக இருந்தாலும் முள் படுக்கை வாகனத்தின் டயர்களை நாசம் செய்துவிடும். இந்த சாலை தடுப்புகள் நல்ல வரவேற்பு பெற்றால் நிச்சயம் இந்தியா முழுவதும் உள்ள மற்ற முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.