fbpx

வாகன ஓட்டிகளே..!! இன்று ஒரு நல்ல செய்தி காத்திருக்கு..!! பெட்ரோல், டீசல் விலை குறைகிறது..? வெளியாகும் அறிவிப்பு..!!

பெட்ரோல், டீசல் விலை குறைப்பது தொடர்பாக இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலும், 19ஆம் தேதி முதல் புதிய கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், 5 மாநில தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் வருவதை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அதற்கான அறிவிப்பும் இன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை நடந்த இக்கூட்டத்தில் சமையல் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த அமைச்சரவைக் கூட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

சூப்பர் அறிவிப்பு...! அரசு சார்பில் மானியத்துடன் இணைந்த கடன் திட்ட முகாம்...! யார் யார் பயன் பெறலாம்...?

Wed Sep 13 , 2023
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளை உள்ளடக்கிய மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கான முகாம் ராயல் மஹால், ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்சியில் 14.09.2023 காலை 10.30 மணி முதல் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக […]

You May Like