fbpx

ஓட்டுப்போடும் வயதை, சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கான வயதாக நிர்ணயிக்க வேண்டும்!… கர்நாடக உயர்நீதிமன்றம்!

சமூக வலைதளங்களை தடை செய்வது நல்லது. இல்லையென்றால், ஓட்டுப்போடும் வயதை, சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கான வயதாக நிர்ணயிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும் சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர். இந்நிலையில், தேசவிரோத டிவிட்டர் பதிவுகளை நீக்குமாறு டிவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டதை எதிர்த்து அந்நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.நரேந்தர் மற்றும் விஜயகுமார் பாட்டீல் அடங்கிய அமர்வு, சமூக வலைதளங்களை தடை செய்வது நல்லது என்றும் அதன்மூலம் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் என்றும் கருத்து தெரிவித்தது.

மேலும், சமூக வலைதளங்களை பயன்படுத்த வயது நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் அமர்வு, 17-18 வயதில் தான் நல்லது, கெட்டதுகளை ஆராயக்கூடிய தன்மையும் பக்குவமும் வரும். நாட்டுக்கு எது நல்லது, நாட்டின் நலனுக்கு எதிரானது எது என்பதை மாணவர்களால் புரிந்துகொள்ள முடியும். ஓட்டுப்போடுவதற்கான வயதை சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கான வயதாகவும் நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

Kokila

Next Post

மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Wed Sep 20 , 2023
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 23-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24, 25 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி […]
நெருங்கும் ’மாண்டஸ்’ புயல்..!! பொதுமக்களே கவனம்..!! சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு..!!

You May Like