சென்னையில் போதைப் பொருள் வைத்திருந்ததாக “சுந்தரி” என்ற சீரியலில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை மீனா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்யா நடித்த “டெடி” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த மீனா, சின்னத்திரையில் “சுந்தரி” என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இவர், 5 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகே போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வாட்ஸ்அப் குழு மூலம் போதைப் பொருட்களை வாங்கி சக நடிகர், நடிகைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. ஒரு கிராம் 2,000 ரூபாய் என்ற வீதத்தில் மெத்தம்பெட்டமைனை வாங்கி 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்திருக்கிறார்.
யாரிடம் இந்த போதைப்பொருளை வாங்கினார்..? இந்த சம்பவத்தில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது..? யாருக்கெல்லாம் விற்பனை செய்தார்..? இவருக்கு பின்னால் ஏதேனும் கும்பல் உள்ளதா..? என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகளிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.